பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 - பெரிய புராண விளக்கம்-2

  • iாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்

ஆசை மேலும்ஒர் ஆசை அளிப்பதோர் தேசின் மன்னிஎன் சிங்தை மயக்கிய ஈச னார்.அருள் எங்நெறிச் சென்றதே. '

பாசமாம்-பந்த பாசமாகும். வினை-தீவினையாகிய, பற்று-பற்றை. அறுப்பான்-அறுத்துக் கொள்வதற்காக. மிகும்-என்னிடத்தில் மிகுதியாக உண்டாகும். ஆசை மேலும் -ஆசைக்கு மேலாகவும். ஓர்-ஒப்பற்ற ஆசை-இவளை அடையவேண்டும் என்னும் ஆசையை.அளிப்பது-உண்டாக்கு வதாகிய, ஓர்-ஒப்பற்ற, தேசின்-திருமேனியில் வீசும் ஒளி போடு. மன்னி-நிலைபெற்று விளங்கி. என்-அடியேனுடைய. சிந்தை-உள்ளத்தை. மயக்கிய-மயங்கச் செய்த ஈசனார். பரமேசுவரராகிய வன்மீக நாதருடைய. அருள்-திருவருளைப் போல விளங்கும் அந்தப் பரவை. எந்நெறி-எந்த வழியாக. ச் சந்தி, சென்றதே-போனாளோ, திணை மயக்கம். இவ்வாறு சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணினார்.

அடுத்து வரும் 158-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய தலைவ: ராகிய வன்மீக நாதருடைய வீரக் கழலைப் பூண்ட திருவடி களை அல்லாமல் வேறு எதையும் நம்பும் வழியை அறியாத அடியேனை நடுக்கத்தை அடையும் வண்ணம் நிலையில்லாத விருப்பத்தை உண்டாக்கிவிட்டுப் பூங்கொடியைப் போலத் துவண்டு இன்றைக்கு அடியேங்களுடைய தலைவனாகிய வன்மீக நாதனுடைய திருவருளைப் போல்பவளாகிய பரவை எந்த வழியாகச் சென்றாளோ?' என்று சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணினார். பாடல் வருமாறு:

உம்பர் நாயகர் தம்கழல் அல்லது நம்பு மாறறி யேனை கடுக்குற வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கிஇன் நெம்பி ரான் அருள் எங்நெறிச் சென்றதே. '