தடுத்தாட்கொண்ட புராணம் - 337
உம்பர்-தேவலோகத்தில் வாழும் தேவர்களுடைய: ஒருமை ப ன் ைம மயக்கம். நாயகர்தம்-தலைவராகிய வன்மீக நாதருடைய. தம்: அசை நிலை. கழல்-வீரக்கழலைப் பூண்ட திருவடிகளை; ஆகுபெயர். கழல் இன்னதென்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க.அல்லதுஅல்லாமல். நம்புமாறு-வேறு எதையும் நம்பும் வழியை. அறியேனை-அறியாதவனாகிய அடியேனை. நடுக்குற-நடுக் கத்தை அடைய. வம்பு-நிலையில்லாத. மால்-விருப்பத்தை; காம மயக்கத்தை செய்து-உடையவனாகச் செய்துவிட்டு. வல்வியின்-பூங்கொடியைப் போல. ஒல்கி-துவண்டு. இன்றுஇன்றைக்கு. எம்பிரான்-அடியேங்களுடைய தலைவனாகிய வன்மீக நாதனுடைய. ‘அடியேங்கள்’ என்றது சுந்தர மூர்த்தி நாயனார் தம்மையும் மற்றத் தொண்டர்களையும் சேர்த்து. அருள்-திருவருளைப் போன்ற பரவை; உவம ஆகுபெயர். எந்நெறி-எந்த வழியாக, ச் சந்தி. சென்றதே-போனாளோ! தினை மயக்கம்.
மகளிருடைய தோற்றத்திற்கும் இடைக்கும் பூங்கொடி
உவமை: 'வல்லிநுண் இடையாள் உமையவள். , 'வல்லிய நுண்ணிடையாள் உமையாள்.', 'கொடிபுல்கு மென்சாயல் உமை.”, “கொடிஇலங்கும் இடையாள்.', 'கொடியிடை வெருவுற.', 'கொடியன சாயலாளோடு.', 'பூங்கொடி மடவாள் உமை.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி தாயனாரும், வள்ளி மருங்குல்.”, இமவான் பெற்ற பெண் கொடி', 'கொடியிடையார் ஏழை மென்றோள் இனை யார்கள்.', 'பைங்கொடியாள் பாகன்.', 'கொடிமருங்குல்
உமையாட்கு." என்று திருநாவுக்கரசு நாயனாரும், குன்ற மலைக்குமரி கொடியே ரிடையாள்.” என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளி.' (திருமுருகாற்றுப்படை, 13-4) என்று தக்கீரரும், புது வதுவை சென்னியுடன் வல்லி பெறுதி.', 'வல்லிநாம்." (விக்கிரம சோழன் உலா, 251, 198)என்று ஒட்டக் கூத்தரும், 'சிறுகொடி மருங்கின்.', 'கொடியென நடுங்கும் கோல மருங்குலர்.', 'கொடிசேர் சாயலை.", "சில்லென்
பெ.-2-22