338 பெரிய புராண விளக்கம்-2
கோலத்துச் சிறுகொடி மருங்கில்.', 'பிடியிடை ஒடுங்கும் கொடியிடை மருங்கின்.', 'வளர்கொடி மருங்குல் வருந்தப் புல்லி.', 'ஒழுகுகொடி மருங்குல் ஒன்றாய் ஒட்டி', 'கொடி புரை மருங்குல் வால்வளைப் பணைத்தோள் வாசவதத் தாய்." (பெருங்கதை, 1. 40:297, 42, 71, 44; 154, 46; 138, 2. 10:43, 16:114, 17: 112-3) என்று கொங்கு வேளிரும், கொடிமின் ணிடைக்கயல் மணிக்கனின் நல்லவர்.' (சீவக சிந்தாமணி, 1310) என்று திருத்தக்க தேவரும், ஒருமடக் கொடி யாகி வந்து.' (அகலிகைப் படலம், 51), "கொடி யுலாம் மருங்குல் நல்லார். (நீர் விளையாட்டுப் படலம், 13), வல்லியை உயிர்த்தநில மங்கை.’’ (கோலம் காண் படலம், 24), கன்றுயிரி காராவின் துயருடைய கொடி.' (குகப் படலம், 66) 'வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கைதன் மருங்குவ நோக்க. (சூர்ப்பனகைப் படலம் 6), வள்ளிநுண் மருங்குல்..' (ஊர் தேடு படலம், 38). :மடக்கொடிச் சீதை.' (காட்சிப் படலம், 64), 'கொடித் தான் என்ன மெய்சுருண்டாள்.' (பிராட்டி களம் காண் படலம், 3) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க.
பிறகு உள்ள 154-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
' 'பாசபந்தத்தையும் முக்தியையும் வழங்கும் பரமேசுவர னாகிய வன்மீக நாதனுடைய வீரக்கழலைப் பூண்ட திருவடி களை அடியேனுடைய உள்ளத்தில் நிறைவு பெறும் வண்ணம் அமையவும் தியானிக்கும் அடியேனுடைய மனத்தை இங்கே வந்து காமமயக்கத்தை உண்டாக்கி விட்டு மானைப் போலத் தோற்றம் அளித்தும், அந்த விலங்கைப் போலப் பார்த்தும் அடியேங்களுடைய தந்தையாரைப் போன்ற வன்மீக நாதர் வழங்கும் திருவருளை ஒத்த பரவை எந்த வழியாகப் போனாளோ'என்று சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணினார்." பாடல் வருமாறு:
பக்தம் வீடு தரும்பர மன்கழல் சிந்தை ஆரவும் உன்னும்என் சிங்தையை