தடுத்தாட்கொண்ட புராணம் 333
வந்து மால்செய்து மான் என வேவிழித் தெங்தை யார் அருள் எந்நெறிச் சென்றதே. '
பந்தம்-பிறப்புக்குக் காரணமான பற்றையும். வீடு. அந்தப் பற்றை ஒழித்து விட்டால் முக்தியையும். தரும்வழங்கியருளும், பரமன்-பரமேசுவரனாகிய வன்மீக நாதனு டைய. கழல்-வீரக் கழலைப் பூண்ட திருவடிகளை; ஆகு பெயர். கழல் இன்னதென்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. சிந்தை-அடியேனுடைய உள்ளம். ஆரவும்-நிறைவு பெறும் வண்ணமும். உன்னும் தியானிக்கும். என்-அடியேனுடைய. சிந்தையை-மனத்தை. வந்து-இங்கே அடியேனுக்கு முன்னாலே வந்து. மால்-காம மயக்கத்தை. செய்து-உண்டாக்கி விட்டு, மான்-மானை. என-என்று கூறும்படி தோன்றியும்; என: இடைக்குறை. ஏ: அசை நிலை. விழித்து-அந்த மானைப் போலவே, நோக்கியும். எந்தையார்-அடியேங்களுடைய தந்தையாரைப் போன்ற வன்மீக நாதர். ‘அடியேங்கள் என்றது. சுந்தர மூர்த்தி நாயனார் தம்மையும் மற்றத் தொண்டர்களையும். சேர்த்து. அருள்-வழங்கும் திருவருளைப் போன்ற பரவை: உவம ஆகுபெயர். எந்நெறி-எந்த வழியாக. ச் சந்தி. சென்றதே-போனாளோ, திணை மயக்கம். . . . . பந்தம் வீடு தரும் பரமன்: 'பந்தமும் விடும் படைப் போன்.’’ என்று திருவாசகத்தில் வருவதைக் காண்க.
மகளிர் தோற்றத்துக்கு மானின் தோற்றமும், அவர்களு டைய பார்வைக்கு மானின் பார்வையும் உவமைகள்: 'மானடைந்த நோக்கி காண மகிழ்ந்தெரி யாடலென்னே..", "மானேர் நோக்கி கண்டங் குவப்ப மாலை ஆடுவார். ’’, மானன மென்விழி மங்கையொர் பாகமும் ஆனவன்.", 'மான் விழித்திருமாதைப் பாகம் வைத்து.', 'மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினர்.', 'மான்அஞ்சம் மடநோக்கி மலைமகள்., 'மானை நோக்கியைத் தேவி தன்னை.", "மானி னேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெருந் தேவி. . 'மானார் விழிநன் மாதொடும் மகிழ்ந்த