பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 பெரிய புராண விளக்கம்-2

போலவே உரைசெய்புன மானை நாடுதல் புரிஞர்.” (பம்பா நதிப் படலம், 17, 43), உழையுலாம் நெடுங்கண் மாதர்." (கவன் காண் படலம், 35), சனகன் மானை நாடி நின்றழைப் பன போன்றன. மஞ்ஞை.' (கார்காலப் படலம், 44), "செவ்வுழை நெடுங்கனவள். (பிலம் நீங்கு படலம்: 55), 'உழைத்தடம் கண்ணி.' (சம்பாதிப் படம், 1): "என்மான் அகவ்வுற்றனள்.', (உருக்காட்டு படலம், 87), மோனார் கண்ணிள மடவா ராயினர். (அட்ச குமாரன் வதைப் படலம், 40), வல்லியம் மருங்கு கண்ட மானென மறுக்க முற்று மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள்.’’ (மாயா சனகப் படலம், 18), மானிடைக் கயலில் வாளின் மலரிடை நயனம் வாங்கி. (நாகபாசப் படலம், 283): 'மானமர் நோக்கி னாரை.' (களியாட்டுப் படலம், 12), 'மானனை யாளை.' (மாயா சீதைப் படலம், 30), 'உழைப் பொலி உண்கண்..” (இராவணன் வதைப் படலம், 231) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க.

"மானின் நோக்கினாள். (புலத்தியப் படலம், 9)’ 'மானை நேர்விழி மங்கையர் வாழ்த்திட (வரை எடுத்த படலம், 29) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றை யும் காண்க,

அடுத்து உள்ள 155-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

என்று சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணி மிகவும் ஆற்ற முடியாதவராய், என்னுடைய உயிரைப் போன்ற பரவை எந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள்?' என்று கருதி, முத்துக்களாலான மாலையாகிய அணிகலனை அணிந்த கொங்கைகளையும், நறுமணம் வீசும் நீண்ட கூந்தலையும், வஞ்சிக் கொடியைப் போன்ற தோற்றப் பொலிவையும் இடையையும் பெற்ற அந்தப் பெண்மணி யைத் தேடுவதற்காகப் போய்த் திருவாரூர்ப் பூங்கோயிலில் உள்ள தேவாசிரயன் என்னும் காவணத்தை அடைந்த, பிறகு.' பாடல் வருமாறு: