344 பெரிய புராண விளக்கம்-2
மென வஞ்சமகள் வந்தாள்.', 'வஞ்சி யன்ன மின்னிடை அலச ஒடி' (சூர்ப்பனகைப் படலம், 31, 66), "வஞ்சியை வல்லைக் கொண்டுபோய்.” (சடாயு உயிர் நீத்த படலம், 143), வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மாலைபோல்.” (கார்காலப் படலம், 119), வஞ்சிடோல் மருங்குவாள்.' (நாடவிட்ட படலம், 37), "வஞ்சியிற் செவ்வியாளை.' (நிந்தனைப் படலம், 74), "வஞ்சியம் மருங்குலம் மறுவில் கற்பினாள்.' (உருக்காட்டு படலம், 106), பஞ்சியடி வஞ்சியர்கள்." (பொழிவிறுத்த படலம், 14), "வஞ்சியை எங்கும் கானா துயிரினை மறந்தா னென்ன..' (மாயா சீதைப் படலம், 51) என்று கம்பரும் பாடியவற்றைக்
శ్రీFTడుf ; ,
" வஞ்சியிடையோ வனமுலையோ. (சம்புவன் வதைப் படலம், 59), வஞ்சியுறை நுண்ணிடை வருந்த.', 'வஞ்சி போல் இடையார்.” (அசுவமேத யாகப் படலம், 49, 68) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க.
அடுத்து உள்ள 156-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
நீலோற்பல மலர்களை ஒத்திருக்கும் கண்களைப் பெற்ற பரவையை அடையும் பொருட்டுச் சுந்தர மூர்த்தி நாயனார் யாரோடும் வார்த்தைகளைப் பேசாமல் இருந்து, "திருவாரூர்ப் பூங்கோயிலை ஆட்சி புரிகிறவராகிய வன்மீக நாதர் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற அந்த மங்கையை அடியேனுக்கு வழங்கி அடியேனு டைய உயிரை விட்டு விடாமல் வழங்கியருள்வார்' என்று அந்த நாயனார் எண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில்.’ பாடல் வருமாறு:
காவி நேர்வரும் கண்ணியை கண்ணுவான் யாவ ரோடும் உரை இயம் பாதிருந்
தாவி நல்குவர் ஆரூரை ஆண்டவர் பூவின் மங்கையைத் தங் தெனும் போழ்தினில். '