தடுத்தாட்கொண்ட புராணம் 345
இந்தப் பாடல் குளகம். காவி-நீலோற்பல மலர்களை: ஒருமை பன்மை மயக்கம். நேர்வரும்-ஒத்து விளங்கும். கண்ணியை-கண்களைப் பெற்ற பரவையை, ஒருமை பன்மை மயக்கம். நண்ணுவான்-அடையும் பொருட்டுச் சுந்தர மூர்த்தி நாயனார். யாவரோடும்-வேறு யாருடனும். உரைவார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். இயம்பாது இருந்து-பேசாமல் இருந்து. ஆருரை-திருவாரூர்ப் பூங் கோயிலை; இட ஆகுபெயர். ஆண்டவர்-ஆட்சி புரிபவராகிய வன்மீக நாதர், பூவின்-செந்தாமரை மலரில் வீற்றிருக்கும். மங்கையை-மங்கையாகிய திருமகளைப் போன்ற அந்தப் பரவையை உவம ஆகுபெயர். த்: சந்தி. தந்து-அடியே னுக்கு வழங்கியருளி, ஆவி-அடியேனுடைய உயிரை. நல்குவர்-விட்டுவிடாமல் அளிப்பார். எனும்-என்று அந்த நாயனார் எண்ணிக் கொண்டிருக்கும்; இடைக்குறை. போழ்தினில்-சமயத்தில். ..
மகளிர் கண்களுக்கு நீலோற்பல மலர்கள் உவமை:
'காவி மலர்புரையும் கண்ணார்.', 'காவியம் சுருங்கண்ணி -னாள்.', 'காவியின் நேர்விழி மாதர்., 'காவியங்கண் மடவாளொடும்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி
நாயனாரும், 'சுனையுள் நீலம் களியும் நெடுங்கணாள்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், குவளைக் க்ண்ணி கூறன் காண்க. (திருவண்டப் பகுதி, 64), பானல் தடங்கண் மடத்தை நல்லீர்.” (திருப்பொற் சுண்ணம், 15) என்று மாணிக்கவாசகரும், 'மாதரார் கண்ணும் மதிநீழல் நீரிணை கொண்டு மலர்ந்த நீலப் போதும் அறியாது வண்டுச லாடும் புகாரே...' (கானல்வரி 6: 3-4), குவளையும்... கொண்ட மாதர் வாண்முகத்து மதைஇய நோக்கமொடு.' {வேனிற்காதை, 65-6), காவி உகுநீரும்.” (வழக்குரை காதை, இறுதி வெண்பா, 2) என்று சிலப்பதிகாரத்தில் இளங் கோவடிகளும், 'சுண்னெனக் குவளையும் கட்டல் ஒம்பினார்.', 'குவளையே அளவுள்ள கொமுங்கணாள்., - தேனிமிர் குவளைக்கட் டிருமகள் அனையாளை.' (சீவக