பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பெரிய புராண விளக்கம்-2

சிந்தாமணி, 51, 243, 2429) என்று திருத்தக்க தேவரும், . பானலங் கண்க ளாட, (வரைக்காட்சிப் படலம், 50), ைேமயவாம் குவளை எல்லாம் மாதர்கண் மலர்கள் பூத்த, ' (நீர் விளையாட்டுப் படலம், 3), வஞ்சி போலிஎன் றடிமிசை வீழ்ந்துரை வழங்கும். (மந்தரை சூழ்ச்சிப் படலம், 68), 'வஞ்சி நாண லிடைக்கும் மடநடை.", வஞ்சியாள் வதனம் என்னும் தாமரை.” (கங்கைப் படலம், 20, 51), 'வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.'" (ஆர்ப்பண கைப் படலம், 31), வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மாலை போல்..' (கார்காலப் படலம், 119), வஞ்சியிற் செவ்வி யாளை.' (நிந்தனைப் படலம், 54), "வஞ்சியம் மருங்குலம் மறுவில் கற்பினாள்.' (உருக்காட்டு படலம், 106), பஞ்சியடி வஞ்சியர்கள். (பொழிவிறுத்த படலம், 14), 'வஞ்சி அஞ்சும் இடை மங்கையர்.” (இராவணன் தானை காண் படலம், 13), 'வஞ்சியை எங்கும் காணாது. (மாயர் சீதைப் படலம், 51) என்று கம்பரும் பாடியவற்றைக் காண்க.

'வஞ்சியிடையோ..” (சம்புலவன் வதைப் படலம், 51), 'வஞ்சிபுரை நுண்ணிடை வருந்த .', 'வஞ்சிபோல் இடை யார். (அசுவமேத யாகப் படலம், 49, 68) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க.

பிற்கு உள்ள 157-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

தன்னுடைய நல்ல புகழை எங்கும் நாட்டிய திருநாவ

லூரில் திருவவதாரம் செய்தருளிய சுந்தர மூர்த்தி தன்னு: டைய திருவுள்ளம் விரும்பியவளும், மின்னலைப் போன்ற இடுப்பைக் கொண்டவளும், இனிய சுவையைப் பெற்ற அமுதத்தைப் போன்றவளும் ஆகிய பரவையை நான் கடலைக் கடைந்து உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லு வதைப் போலப் பூட்டிய ஏழு பச்சைக் குதிரைகளைக் கொண்ட் இரதத்தை ஒட்டுகிறவனாகிய சூரியன் மேற்குச் சமுத்திரத்தில் புகுந்து அத்தமனத்தை அடைய. பாடல் வருமாறு: - -