தடுத்தாட்கொண்ட புராணம் 347 "
காட்டும் கல்லிசை காவலூ ரன்சிங்தை வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக் காட்டு வன்கட லைக்கடைக் தென்பபோல் பூட்டும் ஏழ்பளித் தேரோன் கடல்புக. '
இந்தப் பாடல் குளகம். நல்-நல்ல. இசை-தன்னுடைய புகழை நாட்டும்-எங்கும் நாட்டிய. நாவலூரன்-திருநாவ லூரில் திருவவதாரம் செய்தருளிய சுந்தர மூர்த்தி. சிந்தைதன்னுடைய திருவுள்ளம் வேட்ட-அடைய விரும்பிய, மின்மின்னலைப் போன்ற, இடை-இடுப்பையும். இன்-இனிய சுவையைப் பெற்ற. அமு தத்தினை- அமுதத்தைப் போன்ற வார்த்தைகளையும் பெற்ற பரவையை உவம ஆகுபெயர். க்: சந்தி, கடலை-சமுத்திரத்தை. க்: சந்தி. கடைந்து-நான் கடைந்து. காட்டுவன்-உனக்குக் காட்டுவேன். என்பபோல் என்று கூறுவதைப் போல. பூட்டும்-பூட்டியிருக்கும், ஏழ்ஏழு. பரி-பச்சைக் குதிரைகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. தேரோன்-இரதத்தை ஒட்டுபவனாகிய சூரியன். கடல்-மேற்குச் சமுத்திரத்தில். புக-புகுந்து அத்த மனத்தை அடைய.
பெண்களினுடைய இடைக்கு மின்னல் உவமை: * மின்னாரிடை யாளொடும்.', மின்னார் இடையாள் உமையாளொடும் இருந்த விமலணை.', மின்னி னாரிடை யாளொரு பாகமாய் மன்னினான். ' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், மின்னிறம் மிக்க இடைஉமை நங்கை.', மின்னி னேரிடை யாள் உமை." மின்னின் நுண்ணிடைக் கன்னியர்.', மின்கலந்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்.', மின்னனைய நுண்ணிடையாள் பாகம் தோன்றும்.', மின்னிடையாள் பாகன்.', மின் நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்.', மின்னே ரிடைபங்கன் நீயே.', மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்.', மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்.', 'மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட் கென்றும்,