பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பெரிய புராண விளக்கம்-2

விருப்பவன்.', மின்னொத்த நுண்ணிடையாள் பாகம் கண்டேன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், "மின் செய்த நுண்ணிடையாள் பரவை.', மின்னும் நுண்ணிடை மங்கைமார்.', மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா...' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்.” என்று மாணிக்க வாசகரும், மின்னு ருக்குறும் இடைமெலிய." (சீவக சிந்தாமணி, 185) என்று திருத்தக்க தேவரும், மின்ஒத்த இடையி னாரும்.” (நீர் விளையாட்டுப் படலம், 6). 'மின்னென நுடங்கு கின்ற மருங்குலாள் ஒரு த் தி.” (உண்டாட்டுப் படலம், 16), மின்னேபுரை இடையா ளொடும்.' (பரசுராமப் படலம். 4), மின்னையேய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள்.' (விராதன் வதைப் படலம், 40), மின்னைப்போல் இடையாளொடு.' (சூர்ப்பனகைப் படலம், 62), மின்னிடைச் சனகியை.' (கவன்காண் படலம், 18), மின்னிற மருங்குலாய்.” (காட்சிப் படலம், 37), மின்னிடைச் செவ்வாய்.” (நிந்தனைப் படலம், 12), மின்துன்னு மருங்குல் விளங் கிழையாள்.' (உருக்காட்டு படலம், 10) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க.

'மின்னின் இடைதன் கருத்தறிந்து.', மின்னேரிடை யாள் தன்வயிற்றில் விளங்கும் புகழ்வீ டணன் பிறந்தான்.' (இராவணன் பிறப்புப் படலம், 10, 16), மின்னிடையினார் தம்மை வெல்லவரிது.” (திக்குவிசயப் படலம், 172), 'மின்னார் மருங்குல் திருவென்ன விளங்கும் உருமை." (அனுமப் படலம், 44), மின்னிடை.', மின்னேரி லாத இடை மெல்லியலை.' (திக்கு விசயப் படலம், 17, 71), 'மின்னிடை மடவாய்.”, மின்னிடை யாளைக் கண்டு மெய்யுருகி.' (இலவணன் வதைப் படலம், 21, 23), ‘மின்னியல் நுண்ணிடை மிதிலை வல்லி.' (அசுவ மேத யாகப் படலம், 134) என்று உத்தர காண்டத்தில் வருவன வற்றையும் காண்க. 'மின்னனைய நுண்ணிடையார்.'