350 பெரிய புராண விளக்கம்-2
தங்களோடு வந்து சேரும் மென்மையான பெண் பறவைகளோடு இரையைத் தேடி உண்டுவிட்டுப் பொய்கை யில் பகல் நேரத்தைக் கழித்த பறவைகளினுடைய கூட்டம் தாங்கள் தங்கியிருக்கும் கூடுகளை நோக்கிப் பறந்து போகும் வண்ணமும், தங்களுடைய காதலுக்கு உரியவர்களைப் பிரிந்து தனியாக இருப்பவர்கள் நடுக்கத்தை அடையுமாறும் துன்பத்தை உண்டாக்கும் மாலை நேரம் வந்தது. பாடல்
வருமாறு:
எய்து மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு பொய்கை யிற்பகல் போக்கிய புள்ளினம் வைகு சேக்கைகள் மேற்செல வந்தது பையுள் மாலை தமியோர் பனிப்புற.
எய்து-தங்களோடு வந்து சேரும். மென்-மென்மையான. பெடையோடு-பெண் பறவைகளுடன் ஒருமை பன்மை மயக்கம். இரை-உணவை. தேர்ந்து-தேடிச் சென்று. உண்டுஉண்டுவிட்டு, பொய்கையில்-மனிதர்கள் ஆக்கதை நீர் நிலை களில்; ஒருமை பன்மை மயக்கம். பகல்-பகல் நேரத்தை. போக்கிய-கழித்த புள்-பறவைகளினுடைய ஒ ரு ைம . பன்மை மயக்கம். இனம்-கூட்டம். வைகு-தாங்கள் தங்கி யிருக்கும். சேக்கைகள்-கூடுகளை. மேற்செல-நோக்கிப் பறந்து போகும் வண்ணமும். செல: இடைக்குறை, தமி யோர்-தங்களுடைய காதலுக்கு உரியவர்களைப் பிரிந்து தனியாக இருப்பவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பனிப் புற-நடுக்கத்தை அடையுமாறும். பையுள்-துன்பத்தை உண்டாக்கும். மாலை-மகலை நேரம். வந்தது-திருவாரூரில் வந்து சேர்ந்தது.
மாலை நேரம் தமியோருக்குத் துன்பத்தை உண். டாக்குதல்: "பெரும்புலம் பின்றே சிறு புன் மாலை.” (57:5), 'ஐதுவந் திசைக்கும் அருளில் மாலை, ஆள்வினைக் ககன்றோர் சென்ற நாட்டும், இணைய வாகித் தோன்றின், வினைவவித் தமைதல் ஆற்றலர் மன்னே.” (69: 9-12),