352 பெரிய புராண விளக்கம்-2
“கொடுங்கோற். கோவலர் குழலோ டொன்றி, ஐதுவந். திசைக்கும் அருள் இல் மாலை.' (நற்றிணை, 69. 8-9).
"ஆபெயர் கோவலர் ஆம்பலொ டனை இப், பையுள்
நல்யாழ் செவ்வழி வகுப்ப, ஆருயிர் அணங்கும் தெள்ளிசை,
மாரி மாலையும் தமியள் கேட்டே' (அகநானூறு, 74; 16-7). என வருவனவற்றையும் காண்க.
பிறகு உள்ள 159-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
செம்பஞ்சுக் குழம்பைப் பூசிக் கொண்டிருக்ரும் மென் மையான திருவடிகளையும், பொம்மைகளைப் போன்ற தோற்றத்தையும் பெற்ற பெண்மணிகளினுடைய உள்ளங் களையும், வஞ்சகமான செயல்களைப் புரியும் அறிவுஇல்லாத. மக்களுடைய வலிமையான தீவினையையும், ஹரனுடைய ந.ம.சி,வா,ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தைத் தெரிந்து கொள்ளாத அறிவு இல்லா தவர்களுடைய மனங்களையும் போல உயரமாக உள்ள ஆகாயம் இருண்டு விட்டது. பாடல் வருமாறு:
பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும் வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும் அரன் அஞ்செழுத் தும் உண. ரா.அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்டவான். '
பஞ்சின்-செம்பஞ்சுக் குழம்பைப் பூசிக் கொண்டிருக்கும். மெல்-மென்மையான. அடி-திருவடிகளையும்; ஒரு ைம பன்மை மயக்கம். ப்: சந்தி. பாவையர்-பொம்மையைப் போன்ற தோற்றத்தையும் கொண்ட பெண்மணிகளினு டைய. உள்ளமும்-உள்ளங்களையும்; ஒருமை பன்மை மயக்கம், வஞ்ச-வஞ்சனையான செயல்களைப் புரியும்; ஆகு பெயர். மாக்கன்த்ம்-அறிவு இல்லாத மக்களுடைய; தம்: அசை நிலை. வல்-வலிமையான. வினையும்-தீவினையையும்: பாவத்தையும். அரன்-ஹரனுக்குரிய ஹரன்-சங்காரம் செய்தருள்பவன். அஞ்ச்ெழுத்தும்-ந.ம.சி,வா,ய என்னும்