354 பெரிய புராண விளக்கம்-2
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள்.', 'பஞ்ச ளாவிய இறடி', 'பஞ்சியொளிர்.சீறடிய ளாகி.", பஞ்சின் மெல் லடிகள்.', 'பஞ்சின் மெல்லடியாள் பாகன்.', 'பஞ்சி போர்த்த மெல்லடி.', 'பஞ்சின்மெல் லடியினார்.', :பஞ்சியடி வஞ்சியர்கள்." (நகரப் படலம், 10, எதிர்கோட் படலம், 32, கைகேசி சூழ்வினைப் படலம், 84), கங்கைப் படலம், 20, சித்திர கூடப் படலம், 20, சூர்ப்பனகைப் படலம், 31, 66, வாலிவதைப் படலம், 145, கார்காலப் படலம், 45, பிலம் நீங்கு படலம், 15, பொழில் இறுத்த படலம், 14) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க. :செம்பஞ்சின் சீறடியும்.', 'பஞ்சியடிக்குப் பல்லணி யெல்லாம் அணிவாரும்.” (திக்கு விசயப் படலம், 175, அகவ. மேதயாகப் படலம், 35) என்று உத்தர காண்டத்தில் வருவன வற்றையும் காண்க.
மகளிருக்குப் பாவை உவமை: 'பாடக மெல்லடிப் பாவையோடும்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், :பவளக் கனிவாய்ப் பாவை பங்கன். என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'பூங்கொடிப் பாவையை." என்று. மாணிக்க வாசகரும், 'பொறியறு பாவையின் அறிவறக் கலங்கி.', 'பாவையும் படரொடு பருவரல் கொள்ள.', சபாவை நோக்கத் தாரணங் கெய்தி.’’, 'புதுமரப் பாவை பொறியற் றாங்கு.', 'பாவை பிரிவினைக் காவலன் உணர்ந்தபின்.”, “பொம்மென உயிர்க்கும் பூநுதற். பாவையை.', 'பைவிரி அல்குற் பாவாய்.", 'பொன்புனை பாவையும் போகுதல் வலிப்ப.', 'மறமாச் சேனன் பாவையர்., 'மெழுகுசெய் பாவையின் மெல்லியல் அசைந்து.", "பொறியறு பாவையின்.', 'போதணி கூந்தற் பொற்பூம் பாவை.', 'செல்லப் பாவை சென்றினிது பிறந்துழி.”, “பாசிழையல்குற் பாவையும் புலம்பி.','பாவை. வினவ., "அன்புபுரி பாவை ஆடிய பொய்கையுள்.'" (பெருங்கதை, 1, 33; 146, 198, 35: 48, 36; 60, 47, 240, 48: 30, 108, 53: 137, 2.7: 118-9, 16: 115, 18: 96, 19: 98, 3. i.