தடுத்தாட்கொண்ட புராணம் 355
72, 72, 3: 69, 9: 126) என்று கொங்கு வேளிரும், பாவை
அன்னவர்.', 'பாவை இவள் இருக்கும் இடம்.', 'பாவை நீ புலவியின் நீடல்..' (சீவக சிங்தாமணி, 125, 594, 10.17) என்று திருத்தக்க தேவரும், விலைப்பாவையர் மனமும்
போற் பசையும் அற்றதே. (தாடகை வதைப் படலம், 15), "பைங்கொடி ஒவியப் பாவை போன்றனள். (மிதிலைக் காட்சிப் படலம், 39), 'பாவையர் பணிமென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார்.', 'இப்பாவை எங்கோற் குயிரன்னவள்." (பூக்கொய் படலம், 11, 13), 'பாவைமார் பரந்த கோலப் பண்ணையிற் பொலிவாள்.' (நீர் விளையாட்டுப் படலம், 151), புவிப்பாவை பரம்கெட." (நகர் நீங்கு படலம், 121), பாவையும் அதனைக் கேளா.." (சடாயு உயிர் நீத்த படலம், 88), 'பாவையர் குழாங்கள் சூழ.', 'பாவை பேசுவபோல்..' (ஊர் தேடு படலம், 120, 178), பாவை நின் பொருட்டினால் பழிபெற, (நிந்த னைப் படலம், 69), 'பாவை மார்நறுங் குழல்களும் பரிமளம் கமழ்ந்த. (இலங்கை எரியூட்டு படலம், 46), 'பாவை நீ இவனின் வந்த பயன் பழுதாவ தன்றால்.’ (மாயா சனகப் படலம், 54), 'பாவையர் குழுவை. (மீட்சிப் படலம், 170) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க.
'பொருள் தேர் பாவையர்க்கும் உண்டோ பதி. (திக்கு விசயப் படலம், 160) என்று உத்தரகாண்டத்திலும், பாவாய் இதுநமக்கோர் பான்மையே ஆகாதே." (94: 1) என்று பெரிய திருமொழியிலும், 'என்பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளுர்க்கே.', 'பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டி என் பாசறவே...' (6: 7: 3, 8 7) என்று திரு வாய் மொழியிலும் வருவனவற்றைக் காண்க.
பிறகு வரும் 160-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:
"ஒரு குற்றமும் இல்லாத திருவுள்ளத்தைப் பெற்ற வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனாரே வருத்தத்தை அடைந்தால் ஒடியும் இடுப்புக்களைப் பெற்ற மங்கைமார்