பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பெரிய புராண விளக்கம்-2

களிடம் வேறு யார் பிழைப்பார்?' என நறுமணம் கமழும் மலர்களை அணிந்த இரவாகிய நங்கை யாவருக்கும் முன்னால் கொண்ட புன்னகையைப் போல வெண்மையான நிலா அரும்பியது. பாடல் வருமாறு:

மறுவில் சிந்தைவன் றொண்டர் வருந்தினால் இறும ருங்குலார்க் கியார் பிழைப் பார்?' என்று நறுமலர்க்கங்குல் கங்கைமுன் கொண்டபுன் முறுவல் என்ன முகிழ்த்தது வெண்ணிலா. '

மறு-ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக்குறை. சிந்தை-திருவுள்ளத்தைப் பெற்ற வன்றொண்டர்-வன் றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனாரே, வருந்தினால்பரவையை அடைய வேண்டுமென்று வருத்தத்தை அடைந் தால், இறு-ஒடிந்து போவதைப் போல் உள்ள மருங் குலார்க்கு-இடுப்புக்களைப் பெற்ற பெண்மணிகளிடத்தில்; உருபு மயக்கம். மருங்குல்: ஒருமை பன்மை மயக்கம். இ. குற்றியலிகரம். யார்-வேறு எந்த ஆடவர். பிழைப்பார்வருத்தத்தை அடையாமல் இருப்பார். என்று-என. நறுநறுமணம் கமழும். மலர் - மலர்களைத் தன்னுடைய கூந்தலில் அணிந்த ஒருமை பன்மை மயக்கம். கங்குல் நங்கைஇரவாகிய நங்கை. முன்யாவருக்கும் முன்னால், கொண்டதன்னுடைய வாயில் கொண்ட புன்முறுவல்-புன்னகையை. என்ன்-போல. வெண்-வெண்மையான. நிலா-நிலாவை. முகிழ்த்தது-சந்திரன் அரும்பச் செய்தது. -

கங்குல் நங்கை சேணு லாவிய நாளெ லாமுயிர் ஒன்று போல்வன செய்து பின், ஏணு லாவிய தோளி னானிடர் எய்த ஒன்றும் இரங்கிலா, வாணி லாநகை ம்ாத ராள்செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும், நாணி னாளென ஏகி னாள்நளிர் கங்குலாகிய நங்கையே.” வினைப் படலம், 46)

இறுமருங்குல்: "இறுமென நுடங்கும் சிறுகொடி மருங்கின்." (பெருங்கதை, 1, 40: 297) . .

(கம்பராமாயணம், கைகேசி சூழ்