இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தடுத்தாட்கொண்ட புராணம் 357.
அடுத்து உள்ள 161-ஆம் பாடலின் க்ருத்து வருமாறு: 'தங்களுக்குத் துன்பத்தை உண்டாக்கும் மக்களுக்காக வருத்தத்தை அடைந்து தங்களுடைய அருமையான உயிரைப் போன்ற கணவர்கள் தங்களுடைய கைகளால் தடவ மலர்ச்சியை அடையும் நல்ல குடும்பத்திற் பிறந்த காதல் மருவும் பெண்மணிகளைப் போலப் பரவியிருந்த கொடுமை யான பகல் நேரத்தில் தவிர்ச்சியை அடைந்து குளிர்ச்சியைக் கொண்ட சந்திரனுடைய கிரணங்கள் சார்வதனால் ஆம்பல் மலர்கள் மலர்ந்தன. பாடல் வருமாறு:
- அரங்தை செய்வார்க் கழுங்கித்தம் ஆருயிர் வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல் பரந்த வெம்பகற் கொல்கிப் பனிமதிக் கரங்கள். தீண்ட அலர்ந்த கயிரவம். ! அரந்தை-தங்களை விரும்பித் துன்பத்தை செய் வார்க்கு-உண்டாக்கும் காமுகர்களுக்காக ஒருமை பன்மை மயக்கம். அழுங்கி-வருத்தத்தை அடைந்து. த், சந்தி. தம்தங்களுடைய. ஆருயிர்-அருமையான உயிர்களைப் போன்ற: ஒருமை பன்மை மயக்கம், வரன்-கணவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். கை-தங்களுடைய கைகளால்; ஒருமை பன்மை மயக்கம். தீண்ட-தங்களை வருட, மலர்-அதனால் தங்களு டைய முகங்கள் மலரும். குல-நல்ல குடும்பத்தில் பிறந்த, மாதர்-காதல் மருவிய பெண்மணிகளை ஒருமை பன்மை மயக்கம். போல்-போல. பாந்த-பரவியிருந்த, வெம்-வெப்ப மான, பகற்கு-சூரியனுடைய வெயிலுக்கு: ஆகுபெயர். ஒல்கி-தளர்ச்சியை அடைந்து. ப்: சந்தி, பனி-குளிர்ச்சியைப் பெற்ற, மதி-சந்திரனுடைய கரங்கள்-கிரணங்களாகிய நிலா. தீண்ட-வீச. கயி லம்-ஆம்பல் மலர்கள் ஒருமை பன்மை மயக்கம்; அல்வி மலர்களுமாம். அலர்ந்த-மலர்ந்தன.
ஆரூயிர் வரன்: சேணு லாவிய நாளெ லாம்.உயிர் ஒன்று போல்வன செய்து பின், ஏணுலாவிய தோளினான்.' (கைகேசி சூழ்வினைப் படலம், 46) என்று கம்பராமாயணத் தில் வருவதைக் காண்க.