பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பெரிய புராண விளககம்-2

பிறகு உள்ள 162-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "இந்த உலகத்தில் பிறக்கும் நிலைபெற்ற உயிர்கள் எல்லாவற்றிற்கும் பரிசுத்தத்தையே உண்டாக்கும் இன்பத் தையும் குளிர்ச்சியையும் வழங்கி விட்டுச் சென்று அண்டங்கள் எல்லாவற்றிலும் முழுதும் பரவியிருந்து தலைவனாகிய வன்மீக நாதனுக்கு உரிய வெண்மையான விபூதியினுடைய பெரிய பிரகாசத்தைப் போலச் சந்திரன் வீசும் நீளமான கிரணங்களாகிய நிலா விளங்கியது. பாடல் வருமாறு:

தோற்றும் மன்னுயிர் கட்கெலாம் தூய்மையே சாற்றும் இன்பமும் தண்மையும் தந்துபோய் ஆற்ற அண்டமெ லாம்பரங் தண்ணல் வெண் ணிற்றின் பேரொளி போன்றது நீள்கிலா. ' தோற்றும்-இந்த உலகத்தில் பிறக்கும். மன்-நிலை பெற்ற. உயிர்கட்கு-பல வகையான உயிர்களுக்கு. அவை யாவன: மக்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் பிராணிகள் முதலியவை. எலாம்-எல்லாவற்றிற்கும்; இடைக் குறை. தூய்மையே-பரிசுத்தத்தையே. சா ற் று ம்-உண் டாக்கும். இன்பமும்-இன்பத்தையும். தண்மையும்-குளிர்ச்சி யையும். தந்து-வழங்கிவிட்டு. போய்-சென்று. ஆற்றமுழுதும். அண்டம்-அண்டங்கள்: உலகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாவற்றிலும்; இடைக்குறை. பரந்து-பரவியிருந்து. அண்ணல்-தலைவனாகிய வன்மீக நாதனுக்கு உரிய, வெண்-வெண்மையான. நீற்றின்-விபூதி யினுடிைய. பேரொளி-பெரிய பிரகாசத்தை. நீள்-நீளமான. நிலா.சந்திரன் வீசும் நிலா, போன்றது-போல விளங்கியது. அடுத்து வரும் 163-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: வாவியில் பறவைகளினுடைய சத்தம் அடங்கியுள்ள மாலை நேரத்தில் திருநாவலூரில் திருவவதாரம் செய் தருளிய சுந்தர மூர்த்தி நாயனாரும் நங்கையாகிய பரவை ஆகும் பாவையைப் போன்ற பெண்மணி உண்டாக்கிய