தடுத்தாட்கொண்ட புராணம் 359
துன்பத்தைக் கொடுக்கும் பெரிய காதலும், தம்முடைய உயிரைச் சூழ்ந்துள்ள தனிமையுமாக ஆனார். பாடல் வருமாறு:
வாவி புள்ளொலி மாறிய மாலையில் காவ லூரரும் நங்கை பரவையாம் யாவை தந்த படர்பெருங் காதலும் ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார். '
வாவி-வாவியில்; வாபி என்னும் வடசொல் திரிபு. புள்-மீன்கொத்திப் பறவை முதலிய பறவைகளின் ஒருமை பன்மை மயக்கம். ஒலி-சத்தம். மாறிய-அடங்கிய. மாலையில் -மாலை நேரத்தில். நாவலூரரும்-திருநாவலூரில் திருவவ தாரம் செய்தருளிய சுந்தர மூர்த்தி நாயனாரும். நங்கைநங்கையாகிய. பரவையாம் - பரவையாகும். பாவைபொம்மையைப் போன்ற பெண்மணி. தந்த-உண்டாக்கிய. படர்-துன்பத்தைத் தரும். பெரும்-பெரியதாக இருக்கும். காதலும்-காம மயக்கமும். ஆவி-தம்முடைய உயிரை. சூழ்ந்த-சூழ்ந்துள்ள தனிமையும் தனியாக இரு க் கு ம் தன்மையுமாக. ஆயினார்-ஆனார். ‘.
அடுத்து உள்ள 164-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
'சிவபெருமானுடைய அழகிய கண்ணில் எழுந்த நெருப்பில் அகப்பட்டு எரிந்துபோன மன்மதன் வெளியில் தன்னுடைய உருவத்தை மீண்டும் பெற்று வந்து என்னுடைய முன்னால் நின்றுகொண்டு தன்னுடைய மலரம்புகளைத் தொடுத்து எய்வதா? அடியேங்களுடைய தந்தையாரைப். போன்ற வன்மீக நாதர் வழங்கும் திருவருள் இத்தகை யதோ?' என்று சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணுவா ரானார். பாடல் வருமாறு: - - தம் தி ருக்கண் எரிதழ லிற்பட்டு வெந்த காமன் வெளியே உருச்செய்து வந்தென் முன்னின்று வாளி தொடுப்பதே? எங்தை யார் அருள் இவ்வண்ண மோ?’ என்பார். '