зво பெரிய புராண விளக்கம்-2
தம்-சிவபெருமானுடைய. திரு-அழகிய. க், சந்தி. கண்நெற்றிக்கண்ணில். எரி-எரியும். தழலில்-நெருப்பில். பட்டுஅகப்பட்டு. வெந்த-எரிந்து போன. காமன்-மன்மதன். வெளி-வெளியில். ஏ: அசை நிலை. உரு-தன்னுடைய உருவத்தை. ச் சந்தி. செய்து-மீண்டும் அடைந்து வந்துஇங்கே வந்து. என்-என்னுடைய. முன்-முன்னால் நின்றுநின்று கொண்டு. வாளி-தன்னுடைய மலரம்புகளை ஒருமை பன்மை மயக்கம். அந்த அம்புகளாவன: தாமரைமலர்: மாமலர், அசோகமலர், முல்லை மலர், நீலோற்பல மலர் என்பவை. தொடுப்பதே-தன்னுடைய கரும்பு வில்லில் வைத்துத் தொடுத்து எய்வதோ. எந்தையார்-அடியேனு டைய தந்தையாரைப் போன்ற வன்மீக நாதர். அருள்வழங்கும் திருவருள். இவ்வண்ணமோ-இத்தகையதோ என்பார்-என்று சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணுவா ரானார்.
கண் தழலிற் பட்டு வெந்த காமன்: 'கண்ணிறைந்த விழியின் அழலால் வருகாமன் உயிர்வீட்டி.', 'காமன் எரிப் பிழம்பாக நோக்கி.", "பார்த்தவன் காமனைப் பண்பழிய.", “காமனைக் கனலாகச் சீறி.”, "காயச் செவ்விக் காமற். காய்ந்து.', 'கருப்புநல் வார்சிலைக் காமன்வேலக் கடைக். கண்டானும்.', 'காமனார் உடல்கெடக் காய்ந்தஎம் கண்ணுதல்.”, “கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த... பிரான்.', 'பொருசிலை மதன னைப் பொடிபட விழித்தவர்.', 'கரும்பமர் வில்லியைக் காய்ந்து.', 'காமனைக் காய்ந்தவர்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், விழித்தனர் காமனை வீழ்தர.', 'காமனைக் காய்ந்த கண்ணார்.', 'காமனை அன்று கண்ணாற் கனலெரி யாக நோக்கி.', 'அஞ்சணை கணையி னானை அழலுற அன்று நோக்கி.', 'கண்ணினாற். காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும்.', 'காய்ந்தாய். அனங்கன் பொடிபட', 'கரும்பு பிடித்தவர் காயப்பட். டார்.', 'காமன் பொடிபடக் காய்ந்த, கடல்நாகைக்