28 பெரிய புராண விளக்கம்-2
கலவை-கலந்த குழம்பை.சாத்தி-சுந்தரமூர்த்தியினுடைய திருமேனியில் பூசிவிட்டு. ப்:சந்தி. பால்-பசுமாட்டினு டைய பால். மறை-மறையும் வண்ணம் வெண்மையாக விளங்கும். முந்நூல்-மூன்று புரிகளைக் கொண்ட பூணுால். மின்ன-மின்னலைப் போல ஒளியை வீச. ப்:சந்தி. பவித் திரம்-தருப்பைப் புல்லால் செய்த பவித்திரத்தை அணிந்த, சிறந்த-சிறப்பை அடைந்த கையான்-வலக் கரத்தைப் பெற்ற சுந்தரமூர்த்தி. - . பிறகு உள்ள 18-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தூய்மையான மலர்களைக் கட்டுதலைப் பெற்ற மாலை யையும், கொத்துக்களும் இதழ்களையும் கொண்ட தலை மாலையையும், வேறு வகையான மாலையையும், மற்றொரு விதமான மாலையையும் இத்தகைய வேறு வேறு மாலை களைத் தக்க வகையினால் பொருந்தும் வண்ணம் சுந்தர மூர்த்தி அணிந்து பெருமையைப் பெற்ற மாணிக்கத்தைப் புனைந்த பரிசுத்தமான வளரும் பிரகாசத்தை வீசுவதும் இருட்டைஅடியோடு போக்குவதும் ஆகிய பல வகைப் பெயர் களைக் கொண்ட நீளமான ஆபரணங்களை அணிந்து நன்மையைப் பெற்ற திருமணக் கோலத்தை மேற்கொண் டான். பாடல் வருமாறு: . "தூமலர்ப் பிணையல் மாலை
துணர்இணர்க் கண்ணி கோதை, தாமம்என் றினைய வேறு
தகுதியால் அமையச் சாத்தி மாமணி அணிந்த தூய - வளர்ஒளி இருள் கால் சீக்கும் காமtள் கலன்கள் சாத்தி
நன்மணக் கோலம் கொண்டான். '
தூ-பரிசுத்தமான மலர்-மலர்களை ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பிணையல்-கட்டிய மாலை. மாலை