தடுத்தாட்கொண்ட புராணம் 353
என்று சுந்தர மூர்த்தி நாயனார் குறை கூறியருளினார்.’ பாடல் வருமாறு:
ஆர்த்தி கண்டும் என் மேல்கின் றழற்கதில் தூர்ப்ப தே!ளனைத் தொண்டுகொண் டாண்டவர் நீர்த்த ரங்க நெடும் கங்கை நீள்முடிச் சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி.
ஆர்த்தி-அடியேன் பரவையாரிடம் கொண்ட காம வேதனையை. கண்டும்-பார்த்தும். என்மேல்-அடியேன்மீது. நின்று-வானத்தில் இருந்துகொண்டு. அழல்-நெருப்பைப் போன்ற கதிர்-கிரனங்களாகிய நிலாவை; ஒருமை பன்மை மயக்கம். துர்ப்பதே-சந்திரன் வீசுவதா? சந்திரன்: தோன்றா எழுவாய். எனை-அடியேனை இடைக்குறை. தொண்டுதொண்டனாக திணைமயக்கம். கொண்டு-ஏற்றுக்கொண்டு. ஆண்டவர்-தடுத்து ஆட்கொண்டவரும். நீர்-நீர் நிரம்பிய. த்:சந்தி. தரங்க-அலைகளை வீசும்: ஒருமை பன்மை மயக்கம். நெடும்-நீளமாக இருக்கும். கங்கை-கங்கையாற்றை. நீள்உயரமான முடி-தம்முடைய தலையில் அணிந்தவரும்: திணைமயக்கம், ச்: சந்தி. சாத்தும்-சூடும். வெண்-வெண்மை யான மதி-பிறைச் சந்திரனை. போன்று-போல. தண்குளிர்ச்சியைப் பெற்ற, மதி-சந்திரனே விளி. இலை-நீ" இருக்கவில்லையே; இடைக்குறை.
பிறகு வரும் 166-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
தொடர்ந்து மேலும் மேலும் அலைகளை வீசிக் கொண்டு பொங்கி எழும் கடலே, அடியேனை முன்பு ஒரு நாள் தடுத்து ஆட்கொண்டவராகிய வன்மீக நாதர் விழுங்கும்வண் ணம் கடுமையாக உள்ள ஆலகால விடத்தை உன்னுடைய அலைகளாகிய கைகளால் எடுத்து நீட்டிய நீ அடியேனை இன்றைக்கு என்னதான் செய்ய மாட்டாய?’ என்று சுந்தர மூர்த்தி நாயனார் கடலைப் பார்த்துத் திருவாய் மலர்த் தருளிச் செய்தார். பாடல் வருமாறு: