364% பெரிய புராண விளக்கம்-2
அடுத்து மேன்மேல் அலைத்தெழும் ஆழியே தடுத்து முன்னனை ஆண்டவர் தாம்.உணக் கடுத்த நஞ்சுன் தரங்கக் கரங்களால் எடுத்து நீட்டு என்னை இன் றென்செயாய்: '
இது சுந்தர மூர்த்தி நாயனார் கடலை நோக்கித் திரு வாய் மலர்ந்தருளிச் செய்தது. அடுத்து-தொடர்ந்து. :ேன் மேல்-மேலும் மேலும். அலைத்து-அலைகளை வீசிக் கொண்டு. எழும்-பொங்கி எழும். ஆழியே-கடலே. எனைஅடியேனை; இடைக்குறை. முன்-முன்பு ஒரு நாள். தடுத்து ஆண்டவர் தாம்-தடுத்து ஆட்கொண்டவராகிய வன்மீக நாதர்; தாம்: அசைநிலை. உண-வி ழு ங் கு மா று . க்: சந்தி. கடுத்த-கடுமையாக உள்ள. நஞ்சு-ஆலகால விடத்தை. உன்-உன்னுடைய தரங்க-அலைகளாகிய ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கரங்களால்-கைகளால். எடுத்து நீட்டு நீ-எடுத்து நீட்டிய நீ. என்னை-அடியேனை. இன்றுஇன்றைக்கு. என்-என்ன. செயாய்-செய்ய மாட்டாய்: இடைக்குறை.
ஆலகால விடம் உப்புக் கடலில் எழுந்ததாக ஒரு கொள்கை உண்டு: “சுரனும் ஏனை இமையவரும் உண்ப ரென அஞ்சி நஞ்சும் அமுதமும் உடன், திரைம கோததியை விட. (28) என்று தக்கயாகப் பரணியில் வருவதைக் காண்க. -
கடல் நஞ்சை நீட்டியது: “கடலில் நஞ்சமுதுண் டிமையோர் தொழுதேத்த.', 'இடியார் கடல்நஞ் சமு. துண்டு.', சூழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டு.”, 'கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத் தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ.', 'கலமார் கடலுள் விடமுண்டு.', 'முந்நீர் சூழ்ந்த, நஞ்சம் உண்ட முதல்வர்.' , 'பண்டாழ் கடல்நஞ்சை உண்டு.”, மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்.',. “காசக் கடலில் விடமுண்ட கண்டத் தீசர்.', 'கடலேறிய