பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தர்ட்கொண்ட புராணம் - .365

தஞ்சமுதுண்டவனே.”, வங்கமலியும் கடல் விடத்தினை நுகர்ந்த அங்கணன்.', 'உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்து.', 'வேலை தன்னில் மிகுநஞ்சினை உண்டிருள் கண்டனார்.', 'கவிபடு தண்கடல் நஞ்சம் உண்ட் கறைக் கண்டனும்.’’, ‘பெருங்கடல் நஞ்சமு துண்டுகந்து., ஆழியுள் நஞ்சமுதாக உண்டு.”, “கடலிடைக்கடு நஞ்சம் உண்ட கடவுள்.', 'கரையார் கடல்நஞ்சமு துண்டவர்.'; என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், கடல் நஞ் சுண்ட கண்டன்.', 'வேலைக் கடல்நஞ்சம் உண்டு.", ‘'வேலைக் கடல் நஞ்சம் உண்டாய் என்விண்ணப்பம்: , "ஒதமர் கடலின் விடமுண்டவன்.', 'வேலைசேர் நஞ்சம் மிடற்றான்.', 'வங்கமலி கடல்நஞ்சம் உண்டாப் போற்றி.', 'அலையார் கடல்நஞ்சம் உண்டார்.', 'அலை யடுத்த பெருங்கடல் தஞ்சமுதா உண்டு.', 'காரார் கடல் நஞ்சை உண்டார்.', 'ஆலாலம் வேலை ஞாலம் எண் டிசை யும் சுடுகின்ற வாற்றைக் கண்டு இமைப்பளவில் உண்டி ருண்ட கண்டர்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், * வங்கயளி கடல்நஞ்சை வானவர்கள் தாம் உய்ய நூங்கி.", *காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர்.’’, 'வங்கம் மேவிய வேலை நஞ்செழ வஞ்சர்கள் கூடித் தங்கள்மேல் அடராமை உண்ணென உண்டிருள் கண்டன்.”, “ஒதக் கடல்நஞ்சினை உண்டிட்ட பேதைப் பெருமான்.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், வேலை நஞ்சுகண் மழைதரு கண்டன்.", "மறிகடல் விடமுண்ட வானவா." என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 167-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'தமிழ் நாட்டில் வீசும் தென்றற் காற்றே, நீ பிறந்த இடம் அடியேங்களுடைய தலைவனாகிய சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் பொதிய மலையில்; சிறப்பை அடைந்திருப்பது தெய்வத் தன்மையைப் பெற்ற நீர் வளத்தைப் பெற்ற சோழவள நாட்டில் வெளியில் உள்ள வயல்களிலிருந்தும், தடாகத்திலிருந்தும் வந்து வெப்பம்