பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம 36.7

வதற்குரிய உள்ளம் தயங்கும் வண்ணம் செல்லும் அன்னப் பறவையைப் போன்ற தோற்றப் பொலிவையும், நடக்கும் நடையையும் பெற்ற பரவையினுடைய செயலை இனிமேல் பாடத் தொடங்குவோம். பாடல் வருமாறு:

இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னு காதல னாகிய வள்ளல்பால் தன்ன ரும்பெறல் நெஞ்சு தயங்கப்போம் அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம். '

இது சேக்கிழார் கூற்று. இன்ன-இத்தகைய தன்மையஇயல்பைப் பெற்ற வார்த்தைகளை. பின்னும்-பிறகும். இயம்புவான்-கூறுபவனாகிய சுந்தர மூர்த்தி. மன்னு-நிலை. பெற்று விளங்கும். காதலன் ஆகிய-காம மயக்கத்தைக், கொண்டவனாகிய, வள்ளல்டால்-வள்ளலாகிய அவனிடத். தில். தன்-தன்னுடைய. அரும் பெறல்-அருமையாகப் பெறு வதற்குரிய நெஞ்சு-உள்ளம். தயங்க-தயக்கத்தை அடையும் வண்ணம். ப்: சந்தி. போம்-செல்லும். அன்னம்-அன்னப் பறவையை. அன்னவள்-போனற தோற்றப் பொலிவையும் நடக்கும் நடையையும் பெற்ற பரவையினுடைய செய்கைசெயலை. அறைகுவோம்-இனிமேல் பாடத்தொடங்குவோம்

அன்னம் அன்னவள்: "அன்னம் அன்ன மென்னடை யாள்.', 'அன்னமன நடையாள்.', 'மடஅன்னமும் அன்னதோர் நடையுடைம் மலைமகள்.', 'அன்ன நடை.", அன்ன மென்னடை அரிவையொ டினிதுறை அமரர்தம் பெருமானார்.', 'அன்ன மன்னந் நடைச் சாயலோடு.”, 'அன்னம்அன் னந்நடை யாளொடும்.', 'அன்ன மன் னந் நடை அரிவை பங்கரே.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், அன்ன தடையார் அதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே.', 'அன்ன மெல்நடை யாளை யொர் பாகமா.', 'அன்ன நடைமடவாள் பாகத் தானே.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'அன்னமென் நடையி னாரும்., 'அன்னம் அனையாள் புலவியினை அகற்றில்,