பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பெரிய புராண விளக்கம்-2

உண்டாகும் பெரியதாகிய மையலையும் கொண்டு தன்னு: டைய மாணிக்கங்களைப் பதித்த திருமாளிகையை அடைந்: தாள். பாடல் வருமாறு:

  • கனம்கொண்ட மணிகண்டர் கழல் வணங்கிக்

கணவனைமுன் பெறுவாள் போல இனம்கொண்ட சேடியர்கள் புடைசூழ

எய்துபெருங் காத லோடும் தனம்கொண்டு தளர்மருங்கு ற் பரவையும்வன்

றொண்டர்பால் தனித்துச் சென்ற மனம்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு

தன்மணிமா ளிகையைச் சார்ந்தாள்.

கனம் கொண்ட-மேகத்தின் நிறத்தைப் பெற்ற, கனம்: ஆகுபெயர். ம்ணி-நீலமணியைப் போன்ற கண்டர்-கழுத் தைப் பெற்றவராகிய வன்மீக நாதருடைய. கழல்-வீரக். கழலைப் பூண்ட திருவடிகளை ஆகுபெயர். கழல் இன்ன தென்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டு ணர்க. வணங்கி-பணிந்துவிட்டு க், சந்தி. கணவனை-தன்னு: டைய கணவனாகச் சுந்தர மூர்த்தியை. முன்-முன்னால். பெறுவாள் போல-அடைபவளைப் போல. இனம்-கூட்ட மாக, கொண்ட-கூடிக் கொண்டிருந்த சேடியர்கள்-தன்னு, டைய தோழிமார்கள். புடை-தன்னுடைய பக்கத்தில். சூழசூழ்ந்து வர. எய்து-அடைந்த பெரும்-பெரியதாக இருக்கும். காதலோடும்-காம மயக்கத்துடனும். தனம்-கொங்கைகளை; ஒருமை பன்மை மயக்கம். கொண்டு-தாங்கிக் கொண்டு. தளர்-தளர்ச்சியை அடையும். மருங்குல்-இடுப்பைப் பெற்ற: பரவையும்-பரவை எ ன் னு ம் பெண்மணியும். வன் றொண்டர்பால்-வன்றொண்டராகிய சு ந் த ர மூர் த் தி நாயனாரிடம். தனித்து-தனியாக இருந்து. சென்ற-போன. மனம்-மனத்தை கொண்டு-உடன் கொண்டு. வரும்உண்டாகும். பெரிய-பெரிய தா கி ய. மயல்-மையல்: முயக்கத்தை. கொண்டு-அடைத்து. தன்-தன்னுடைய. மணி