பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 29

வேறு வகையான மாலை. துணர்-கொத்துக்களையும்; ஒருமை பன்மை மயக்கம்.இணர்-இதழ்களையும் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கண்ணி-தலைமாலை. கோதை-மற்றொரு வகையான மாலை. தாமம்-நிலை மாலை. என்று-என்று உள்ள. இணைய-இத்தகைய. வேறு-வேறு மாலைகளை ஒருமை பன்மை மயக்கம். தகுதியால்-தக்க வகையால் அமைய-பொருத்தமாக விளங்கச் சந்தி.சாத்தி-சுந்தரமூர்த்தி அணிந்து. மா-பெரு மையைப் பெற்ற, மணி-மாணிக்கங்களை, ஒருமை பன்மை மயக்கம். அணிந்த-புனைந்த அலங்கரித்த தூயதூய்மையான, வளர்-வளரும். ஒளி-பிரகாசம். இருள்இருட்டை. கால் சீக்கும்-அடியோடு போக்கும். நாமம்-பல வகையான பெயர்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக் கம். கலன்கள்-ஆபரணங்களை. அவையாவன: தங்கச் சங்கிலி, முத்து மாலை, மாணிக்க மாலை, மரகத மாலை, நவமணி மாலை, கிரீடம் முதலியவை. சாத்தி-அணிந்து கொண்டு. நன்-நன்மையைப் பெற்ற, மணக்கோலம்திருமணக் கோலத்தை. கொண்டான்-சுந்தரமூர்த்தி மேற் கொண்டான். -

பிறகு வரும் 19-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அரசர்களுக்கு உரிய செல்வ நிலையும், தங்களுடைய வைதிகர்களுக்கு உரிய செல்வ நிலையும் பொங்கி விளங்க, நன்மைகளைப் பெற்ற நகரமாகிய திருநாவலூர் விழாக் கோலத்தை மேற்கொண்டு திகழ, நம்பியாரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார் தம்முடைய தலைவனாகிய திருநாவலூர் அரனுடைய திருவடிகளைத் தம்முடைய திருவுள்ளத்தில் வைத்துத் தியானித்து பொருத்தமாக விளங்கும் விபூதியைப் பூசிக்கொண்டு தங்கத்தை அணிந்ததும், மாணிக்கத்தைப் பதித்த அங்கவடியைப் பெற்றதுமாகிய யோகக் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு போனார். பாடல் வருமாறு: