தடுத்தாட்கொண்ட புராணம் 371 .
மாணிக்கங்களைப் பதித்த ஒருமை பன்மை மயக்கம். மாளிகையை-திருமாளிகையை சார்ந்தாள்-அடைந்தாள்.
சிவபெருமானுடைய கழுத்துக்கு மேகம் உவமை: காரார் கண்டத் தெண்டோஸ் எந்தை.', 'கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்., 'முகில்தோன்றி யன்ன மணி நீல கண்டம் உடையாய்., 'மழையார் மிடறா.', 'மேகத்த கண்டன்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'மேகம்போல் மிடற்ற ராகி.', 'காரேறு முகிலனைய கண்டத்தான்.', 'காராரும் மணிமிடற்றெம் பெருமான்.", "காரொளிய கண்டத்தெம் கடவுள்.', 'கொடுநஞ் சுண்ட கார்ாரும் கண்டன்.', 'காராரும் கண்டனை.', 'காரேறு முகிலனைய கண்டத் தானே." என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'காராரும் மிடற்றாய்.', 'காரதார் கறை மாமிடற் றானை.', 'கார்நிலவு ம ணி மி ட ற் l ர்.", 'காரிடங்கொள் கண்டத்தன்.', 'காராரும் மிடற்றானை.", காரூர் கண்டத் தெண்டோள்.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'மழை தரு கண்டன்.’’ என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.
மணி கண்டர்: “மணியார் திகழ்கண்டம் உடையான்.', 'கருக்கு மணிமிடறன். 'மணிநீல கண்டம் உடையாய்.”, கறையார் மணிமிடற்றான்.', 'மையார் மணிமிடறன்.", 'நீல மாமணி மிடற்று நீறணிந்த சிவன்.”, “நஞ்சமுது செய்த மணிகண்டன்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி
நாயனாரும், நஞ்சிருள் மணிகொள் கண்டர்.”, நீலமா மணிகண் டத்தர்', 'மணிசெய் கண்டத்து மான்மறிக் கை யினான்.', 'நீலமா மணிகண் டத்தெண் டோளனே.",
"மையாரும் மணிமிடற்றாய்.”, “காராடும் மணிமிடற்றெம் பெருமான்.”, “கருமணிபோற் கண்டத் தழகன்.' என்று திருநாவுக்கரசு நாய னா ரு ம், கறைக்கொள் மணி கண்டமும்.', 'மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்.', 'கார்நிலவு மணிமிடற்றீர்.”, “நஞ்சேரும்