பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 373

களால் ஒருமை பன்மை மயக்கம். ஒதுங்கி-நடந்து சென்று. மாளிகையின்-தன்னுடைய திருமாளிகையில் உள்ள.மேலால்மேல் தளத்துக்கு உருபு மயக்கம். ஏறி-ஏறிச் சென்று. மரகதத் தாணத்து-மரகதக் கற்களால் இழைத்த துண் களோடு: ஒருமை பன்மை மயக்கம். இலங்கு-விளங்கும். மணி-மாணிக்கங்களைப் பதித்த ஒருமை பன்மை மயக்கம். வேதிகையில்-திண்ணையில். நலம்-அழகை. .ெ கா ள்கொண்ட, பொற்கால்-தங்கத்தால் செய்யப் பெற்ற கால் களை உடையதும். கால்: ஒருமை பன்மை மயக்கம். மாறுஒப்பு. இல்-இல்லாததும். இல்: கடைக்குறை. மலர்-மலர் களைப் பாப்பியதுமாகிய, ஒருமை பன்மை மயக்கம், ச். சந்தி. சேக்கைமிசை-படுக்கையின்மேல். மணி-அழகிய நிலா முன்றில்-நிலா முற்றத்தில், மருங்கு-ஒரு பக்கத்தில். வந்து இருந்தாள்-வந்து அமர்ந்திருந்தாள். -

பிறகு வரும் 171-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தச் சமயத்தில் பரவை தன்னுடைய பக்கத்தில் நின்று கொண்டிருந்த தோழியினுடைய முகத்தைப் பார்த்து, 'திருவாரூர்ப் பூங்கோயிலை ஆட்சி புரியும் மையின் நிறத் தைப் பெற்ற கழுத்தைக் கொண்டவராகிய வன்மீக நாதரை நாம் பணிவதற்காகப் போகும் தெருவில் நம்மு டைய எதிரில் வந்த ஆடவர் யார்?' என்று கேட்க, அந்தத் தோழி, இந்த உலகத்தில் வேதியராக எழுந்தருளித் திரு மாலும் பிரமதேவனும் திருவடிகளையும் திருமுடியையும் தேடிய ஒப்பற்றவராகிய திருவெண்ணெய் த ல் லூ ர் அருட்டுறை நாதர் எதிரில் வந்து நின்று தடுத்து ஆண்டு கொண்டவரும், சைவ சமயத்தினுடைய முதல் திருத் தொண்டரும், தம்பிரான் தோழரும் ஆகிய ஆளுடைய நம்பி.' என்று கூறினாள். பாடல் வருமாறு:

“ அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகம் - - நோக்கி,

ஆரூர் ஆண்ட