.374 பெரிய புராண விளக்கம்-2
மைவிரவு கண்டரைநாம் வணங்கப்போம்
மறுகெதிர்வங் தவரார்?' என்ன, இவ்வுலகில் அந்தணராய் இருவர்தே
டொருவர்தாம் எதிர்கின் றாண்ட சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான்
தோழனார் நம்பி. என்றாள். ' அவ்வளளில்-அந்தச் சமயத்தில். அருகு-பரவை தன்னு டைய பக்கத்தில். இருந்த-நின்று கொண்டிருந்த, சேடிதனை தோழியினுடைய உருபு மயக்கம். தன்: அசைநிலை. முகம்முகத்தை. நோக்கி-பார்த்து. ஆரூர்-திருவாரூர்ப் பூங் கோயிலை இட ஆகுபெயர். ஆண்ட-ஆட்சி புரிந்தவரும்: வினையாலணையும் பெயர். மை-மையினுடைய நிறம்: ஆகு பெயர். விரவு-பொருந்திய கண்டரை-கழுத்தைப் பெற்றவ் ராகிய வன்மீக நாதரை. நாம்-நாம் இருவரும். வணங்கபணிவதற்காக. ப்: சந்தி. போம்-செல்லும். மறுகு-தெருவில். எதிர்-நம்முடைய எதிரில். வந்தவர்-வந்த ஆடவர். ஆர்-யார். என்ன-என்று பரவை கேட்க. இவ்வுலகில்-இந்த உலகத்தில். அந்தணராய்-ஒரு முதிய வேதியராகி எழுந்தருளியவரும். இருவர்-திருமால் பிரமதேவன் ஆகிய இருவரும். தேடு-திரு வடிகளையும் திருமுடியையும் பன்றி உருவெடுத்தும் அன்னப் பறவையாகப் பறந்தும் தேடிப்பார்த்த, ஒருவர்தாம்-ஒப்பற்ற வரும் ஆகிய திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறை நாதர்: தாம்: அசைநிலை. எதிர்-எதிரில். நின்று-நின்று கொண்டு. ஆண்ட-தடுத்து ஆட்கொண்டவரும்; வினையாலணையும் பெயர். சைவ-சைவ சமயத்தினுடைய. முதல்-தலைமையான. திருத்தொண்டர்-திருத்தொண்டரும். தம்பிரான் தோழ னார். தம்பிரான் தோழரும் ஆகிய நம்பி-ஆளுடைய நம்பி யாகிய சுந்தர மூர்த்தி நாயனார். என்றாள்-என்று அந்தத் தோழி கூறினாள்.
மைவிரவு கண்டர்: "மையாடிய கண்டன்.', 'மையுள் நஞ்சம் மருவு மிடற்றாரே.”, மைசேர் கண்டர்.”, "மையார் கண்டன்.', 'மையுடைய மாமிடற்றண்ணல்.”,