தடுத்தாட்கொண்ட புராணம் 375
'மையணி மிடறுடை மறையவன்.', 'மைகொள் கண்டத் தெண்டோள் முக்கணான்.', 'மைதவழும் மாமிடறன்.' மையுலா மணிமிடற்றான்.', 'மையினார் மணிபோல் மிடற்றனை.', 'மையார் மணிமிடறன்.', 'மையிலங் கொளிமல்கிய மாசிலா மணிமிடறினார்.”, மையணி மிடறுடை மறையலனே.', 'மையணி கண்டனார்.'; 'மையினார் மிடறினார்.', 'மைகொள் கண்டத்தர்.',
'மையணிமா மிடற்றான்.’’ எனறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், மைஞ்ஞலில் கண்டன்.', 'மையணி கண்டத் தானே.”, ’மையணி கண்டன் மறைவிரி நாவன்.', 'மைகொள் கண்டன் எண்தோளன் முக்கண்ணினன்.', மைகொள் கண்டத்த ராகி.', 'மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.', 'மைய னுக்கிய கண்டனை.', 'மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்.', 'மையனைய கண் டத்தாய்.', 'மைவான மிடற்றானை.', 'மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி,, 'மையாரும் மணி மிடற்றாய் மாதோர் கூறாய்.', 'மையாரும் கண்ட மிடற்றார்.’’ என்று திருநாவுக்கரசு நாய னா ரு ம், மைகொள் கண்டன் எண்டோளன் முக்கண்ணன் வலஞ் சுழி...பரமன்.', 'மையாரும் மிடற்றாய்." “மையார் கண்டத்தினாய்.”, மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்.', 'மைகொள் கண்டனை வாழ்கொளி புத்துார் மாணிக்கத்தை.', 'மைகொள் கண்டர்எண் தோளர்.” என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், மையமர் கண்டனை வான நாடர் மருந்தினை." என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.
அடுத்து வரும் 172-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
என்று அந்தத் தோழி கூறிய வார்த்தைகளைப் பரவை கேட்டவுடனே, "அடியேங்களுடைய தமராகிய தொண் டரோ?' என்று கூறுவதற்கு முன்னாலே, வன்றொண்ட ராகிய சுந்தர மூர்த்தி நாயனாரிடம் வைத்திருந்த தன்னு