378 பெரிய புராண விளக்கம்-2
நுடங்கும் இடையார்.', மின்னிடை நுண்ணிடையார்கள்.” என்று மாணிக்க வாசகரும், மின்னணங் குறுமிடை." (சீவக சிங்தாமணி, 1006) என்று திருத்தக்க தேவரும், 'மின்னிடைச் சீதை பொருட்டா.', மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள்.', மின்னொத்த நுண்ணிடையாய்.” என்று. பெரியாழ்வாரும், மின்னனைய நுண்ணிடையார் உருப் பசியும் மேனகையும்.', மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு.', மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியல்.’ என்று குலசேகரப் பெருமாளும், மின்கொடி மருங்குல் சுருங்க.', மின்குலாம் மருங்குல் சுருங்க.', மின்னின் நுண்ணிடை மடக்கொடி.', மின்னல் மன்னு துடங்கிடை மடவார்.”, “மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள்.',"மின்னனையநுண்மருங்குல் மெல்லியற்கா.', 'மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்வி
யற்கா', மின்னேரிடையார் வேட்கையை மாற்றி.', மின் அனுமா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை.' என்று திருமங்கையாழ்வாரும், மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார்.', மின்னிடையாரோடும் விளையாடி.' என்று ந மாழ்வாரும், மின்னனைய நுண்மருங்குல் வேகவதி.', மின்னிடையாள் நாயகனை.', "மின்னிடை ஆய்ச்சியர்.', மின்னிடையார் சேரியிலும்.' என்று
திருமங்கையாழ்வாரும், மின்பிறழ் நுசுப்பினர்." (திருவ வதாரப் படலம், 116), மின்ஒத்த இடையி னாரும்.” (நீர் விளையாட்டுப் படலம், 6), மின்னென நுடங்கு கின்ற மருங்குலாள் ஒருத்தி." (உண்டாட்டுப் படலம், 16). 'மின்னே புரை இடையாளொடும்.' (பரசுராமப் படலம், 47), மின்னை யேய்இடை நுடங்கிடவிரைந்து தொடர் வாள்.' (விராதன் வதைப் படலம், 40), மின்னைப் போல் இடையாளோடு மேவுமெய் யுடையன் அல்லன்.', "மின்னிடை அலச ஒடி." (சூர்ப்பனகைப் படலம், 61, 66), மின்னிடைச் சனகியை.' (கலன்காண் படலம், 18), மின்னிடைச் செவ்வாய்...வீங்குதேர் அல்குலார்.' {நிந்தனைப் படலம், 12), என்று கம்பரும் பாடியருளிய