தடுத்தாட்கொண்ட புராணம் 379
வற்றைக் காண்க. 'மின்னி னிடைதன் கருத்தறிந்து.' 'மின்னேர் இடையாள் வயிற்றில் விளங்கும் புகழ்வீ டணன் பிறந்தான்.', மின்னிடையாள் சுரபை.” (இராவணன் பிறப்புப் படலம், 10, 16, 65), மின்னிடை யார்தம்மை வெல்ல அரிது.' (திக்கு விசயப் படலம், 172), "மின்னார் மருங்குல் திருஎன்ன விளங்கும் உருமை.' (அனுமப் படலம், 44), மின்னிடை மருங்குல்.”, மின்னிடை பூணாய்,', 'மின்னேரி லாத இடை மெல்லியலையும் விட்டு. (திக்கு விசயப் படலம், 16, 17, 77), மின்னிடை யாளைக் கண்டு மெய்யுருகி.' (இலவணன் வதைப் படலம், 23), மின்னியல் ...நுண்ணிடை மிதிலை வல்லி.' (அசுவ மேதயாகப் படலம், 134) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றைக் காண்க. அடுத்து வரும் 173-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'பரவைக்கு நறுமணம் கமழும் சந்தனக் குழம்பைத் திருமேனி முழுவதும் பூசியும், பெறுவதற்கு அருமையான பன்னீரின் மணம் வீசும் துளிகளை அவளுடைய படுக்கையின் பக்கத்தில் தெளித்தும், தளிர்களை வைத்தும், குளிர்ச்சியை உண்டாக்கும் வாசனைத் திரவியத்தைப் பூசியும், தோழிப் பெண்கள் செய்த இந்தச் செயல்கள் எல்லாம் பெரிய நெருப்பில் நெய்யைப் பொழிந்தாற் போல இருந்தன; அந்த நெருப்பின்மேல் சமிதைகளை இடுவதைப்போல மன்மதனும் தன்னுடைய பெரிய கரும்பு வில்லினுடைய வலிமையைப் புலப்படுத்தி அழகிய மலரம்புகளை மழையைப் போல வந்து எய்தான். பாடல் வருமாறு:
ஆரநறும் சேறாட்டி அரும்பனிநீர்
நறுந்திவலை அருகு வீசி ஈர இளங் தளிர்க்குளிரி படுத்துமட வார்செய்த இவையும் எல்லாம் பேரழலின் கெய்சொரிந்தால் ஒத்தனமற்
றதன்மீது சமிதை என்ன மாரனும்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
மணிவாளி சொரிந்தான் வந்து. '