பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பெரிய புராண விளக்கம்-2

நறும்-நறுமண்ம் கமழும். ஆர-அரைத்த சந்தனத்தின். சேறு-குழம்பை, ஆட்டி-பரவையினுடைய திருமேனி முழு வதும் பூசியும். அரும்-கிடைப்பதற்கு அருமையான பனிநீர்பன்னீரினுடைய, நறும்-நறுமணம் வீசும். திவலை-துளி களை ஒருமை பன்மை மயக்கம், அருகு-பரவை படுத்திருந்த படுக்கையின் பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம், வீசி. தெளித்தும். ஈர-ஈரமான இளம்-முற்றாத இளமையான. தளிர்-இலைகளை ஒருமை பன்மை மயக்கம், க்: சந்தி. பரப்பியும் என ஒரு சொல் வருவிக்க. குளிரி-குளிர்ச்சியை உண்டாக்கும் வாசனைத் திரவியத்தை. படுத்து-பரவையின் திருமேனி முழுவதும் பூசியும், மடவார் செய்த-தோழிப் பெண்கள் செய்த இ ைவ யு ம் - இ ந் த ச் செயல்களும், எல்லாம்-வேறு பரிகாரங்கள் யாவும். பேரழலின்-பெரிய நெருப்பில். நெய்-நெய்யை சொரிந்தால்-மழையைப் போலப் பொழிந்தால், ஒத்தன-போன்றன. மற்று: அசைநிலை. அதன்மீது-அந்தப் பெரிய நெருப்பின்மேல். சமிதை-சமிதை களை இட்டால் ஒருமை பன்மை மயக்கம். என்ன-போல. மாரனும்-மன்மதனும். தன்-தன்னுடைய, பெரும் சிலையின் பெரிய கரும்பு வில்லினுடைய. வலி-வலிமையை. காட்டிபுலப்படுத்தி. மணி-அழகிய. வாளி-மலரம்புகளை; ஒருமை பன்மை மயக்கம். வந்து-அந்த இடத்துக்கு வந்து. சொரிந்: தான்.மழையைப் போல எய்தான். .

பிறகு வரும் 174-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பரவை மலர்களைப் பரப்பிய படுக்கையில் உறக்கத் தைக் கொள்ளவில்லை; வீசி வரும் தென்றற் காற்றுத் தன் னுடைய பக்கத்தில் அடிப்பதைச் சகிக்கவில்லை; மேகங்கள் தவழும் ஆகாயத்திலிருந்து சந்திரன் வீசும் நிலா வெளிவிடும் நெருப்பைப் பொறுக்கவில்லை. உள்ளத்தை நிறுத்துவதைச் செய்யும் பாரத்தைத் தாங்க முடியாத இயல்புடன் கலாபத்தைப் பெற்ற மயிலைப் போலத் தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தன்னுடைய கருமையான கூந்த்லினுடைய பாரத்தைத் தாங்க முடியாத