30 பெரிய புராண விளக்கம்-2
"மன்ன்வர் திருவும் தங்கள்
வைதிகத் திருவும் பொங்க நன்னகர் விழவு கொள்ள
நம்பியா ருரர் நாதன் தன்னடி மனத்துட் கொண்டு
தகும்திரு நீறு சாத்திப் பொன்னணி மணியார் யோகப்
புரவிமேற் கொண்டு போந்தார்." மன்னவர்-அரசர்களுக்கு உரிய. திருவும்-செல்வ நிலையும். தங்கள்-தங்களுடைய வைதிக-வைதிகர் களுக்கு உரிய ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. திருவும்-நிதி நிலையும். பொங்க-பொங்கி விளங்க. நல்-பல நன்மைகளைப் பெற்ற அந்த நன்மைகளாவன: நீர்வளம், நிலவளம், நன்மக்கள் வாழும் வளம், உணவு வளம், ஆபரண வளம் முதலியவை. நகர்-நகரமாகிய திருநாவலூர். விழவு-விழாக் கோலத்தை. கொள்ள-மேற் கொண்டு திகழ. நம்பி ஆகுரர்-நம்பி ஆரூரர் என்னும் இயற் பெயரைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார். நாதன் தன்-திருநாவலூரனுடைய. தன் அசை நிலை. அடிதிருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். மனத்துள்-தம் முடைய திருவுள்ளத்தில். கொண்டு-வைத்துத் தியானித்து. தகும்-தக்க வண்ணம் திகழும். திருநீறு-விபூதியை. சாத்திதிருமேனி முழுவதும் பூசிக்கொண்டு. ப்:சந்தி. பொன்தங்கத்தால், அணி-புனைந்த அங்கவடிகளைப் பெற்றதும்; ஒருமை பன்மை மயக்கம். யோகப்புரவி-யோகக்குதிரையும் ஆகிய வாகனத்தின். மேல்-மீது. கொண்டு-ஏறிக்கொண்டு, போந்தார் - எழுந்தருளினார். சுந்தரமூர்த்தி நாயனா ருடைய இயற்பெயர் ஆரூரன் என்பது, ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே' என்று அவரே தம்மைக் கூறிக்கொள்வ தால் விளங்கும். - -