பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 38H.

கைகளை உடையவளாகி, கோங்கிலவம்ல்ரில் உள்ள இதழ்! களைப் போன்ற சிவந்த காவியைப் போன்ற வாய் தன்னு டைய வசத்தில் நில்லாமையினால் பொருள் அற்ற இத்த கைய வார்த்தைகளை வீணாகப் பரவை கூறலானாள். ' பாடல் வருமாறு: - -

மலரமளித் துயிலாற்றாள்; வரும்தென்றல்

மருங்காற்றாள்; மங்குல் வானில் நிலவுமிழும் தழலாற்றாள்; கிறையாற்றும்

பொறையாற்றா நீர்மை யோடும் கலவமயில் என எழுந்து கருங்குழலின்

பரமாற்றாக் கைய ளாகி இலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்தாற்றா

மையின்வறிதே இன்ன சொன்னாள். ' மலர்- மலர்களைப் பரப்பிய ஒருமை பன்மை மயக்கம். அமளி-படுக்கையில், த், சந்தி. துயில்-உறக்கத்தை. ஆற்றாள் -பரவை கொள்ளவில்லை. வரும்-வீசிக்கொண்டு வரும். தென்றல்-தென்றற்காற்று. மருங்கு-தன்னுடைய பக்கத்தில் வீசுவதை. ஆற்றாள்-பொறுக்க அவளால் முடியவில்லை. மங்குல்-மேகங்கள் தவழும் ஒருமை பன்மை மயக்கம். வானில்-ஆகாயத்திலிருந்து; உருபு மயக்கம். நிலவு-சந்திர :னுடைய கிரணங்களாகிய நிலா. உமிழும்-கொப்புளிக்கும்.

தழல்-நெருப்பை ஆற்றாள்-அவளால் சகிக்க முடியவில்லை. நிறை-தன்னுடைய உள்ளத்தை வேறு ஆடவரிடம் செல் லாமல் நிறுத்தும் செயலை, ஆற்றும்-செய்யும். பொறைபொறுமையை. ஆற்றா-மேற்கொள்ளாத நீர்மையோடும். தன்மையுடனும். கலவ-கலாபத்தைப் பெற்ற மயில் எனமயிலைப் போல; என: இடைக்குறை; என்று சொல்லும் வண்ணம் எனலும் ஆம். எழுந்து-தான் படுத்துக் கொண்டி ருந்த படுக்கையிலிருந்து எழுந்து நின்று. கரும்-கருமையான. குழலின்-தன் கூந்தலினுடைய. பரம்-பாரத்தை. ஆற்றாதாங்க முடியாத, கையளாகி-கைகளை உடையவளாகி; துருமை பன்மை மயக்கம்.இலவ-கோலங்கிலவ மலரில் உள்ள்.