384 பெரிய புராண விளக்கம்-2
பொற்கொடி..' (உலாவியற் படலம், 1, 29), கைவளர் மயில் னாளை.' (கோலம் காண் படலம், 18), தொண்டை வாய்க்கேகயன் தோகை. , 'நாடகமயில் துயின்றென்ன.' (மந்தரை சூழ்ச்சிப் படலம், 41, 88). தோகையர் குழாமும்." (கைகேசி சூழ்வினைப் படலம், 68), "ஆடுகின்ற மாமயிலினும் அழகிய குயிலே.", "வளைகள் காந்தளிற்
பெய்தன. அனையகைம் மயிலே.', வடுவின் மாவகி ரிவை யெனப் பொலிந்தகண் மயிலே.', 'ஆய்மயிற் பெண்ணருங் கலமே.'(சித்திர கூடப் படலம், 12, 29, 10, 32), 'தேமலர்த் தொகை இழந்தன தோகையர் ஒதியே." "முழையின்
மஞ்ஞைபோல் எரியின் மூழ்கினார்." (பள்ளியடைப் படலம் 25, 128), அஞ்சொலிள மஞ்ஞையென.வஞ்சமகள் வந் தாள்.', 'மானின்விழி பெற்றுமயில் வந்ததென வந்தாள்.'
(சூர்ப்பணகைப் படலம், 31, 33), 'மயிலுடைச் சாய லாளை.' (மாரீசன் வதைப் படலம், 85), 'தோகையும்
இவ்வழித் தோமில் சிந்தனை, சேகறு நோன்பினர் என்னும்
சிந்தையாள்.', 'புனமயிற் சாயலின் எழிலில்..' (சடாயு உயிர்நீத்த படலம், 25, 28), 'மயிலியல் பிரிந்தபின்.”
(அயோ முகிப் படலம், 95), தோகையும் பிரிந்தனள்.' (கவந்தப் படலம், 24), 'ஓடா நின்ற களிமயிலே சாங்ற் கொதுங்கி உள்ளழிந்து, கூடா தாரில் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ...' (பம்பாநதிப் படலம், 27), "குலங்கொள்
தோகை மகளிர்.', 'மயிலியல்...மாதர்.' (கிட்கிந்தைப் படலம், 45, 77), 'காண்டகு தோகை.', 'மயிலியற் றேவி
-மார்கள்.” (கடல்தாவு படலம், 2, 12), கானக மயில்கள் என்ன...பொலிதர அரக்கர் மாதர்., 'மழைதொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின் றாரை.', 'மயிலே அன்னார். (ஊர் தேடு படலம், 103,116, 215), மயிலியற் குயில் மழலையாள்.' (காட்சிப் படலம், 4), தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான்." (உருக்காட்டு படலம், 4), 'மயிலியற் சீதை.' (பிணி விடு படலம், 15), 'மயிற்புனை இயலினாரும்." (திருவடி தொழுத படலம், 71) என்று.கம்ப ராமாயணத்தில் வருவனவற்றைக் காண்க்.