பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 பெரிய புராண விளக்கம்-2

வந்திங் குலவும் நிலவும் விரையார்

மலயா னிலமும் எரியாய் வருமால், அந்தண் புனலும் அரவும் விரவும்

சடையான் அருள்பெற் றுடையார் அருளார். '

கந்தம்-நறுமணம். கமழ்-கமழும். மென்-மென்மையான. குழலீர்-கூந்தலை உடைய என்னுடைய தோழிமார்களே. இது-நீங்கள் செய்யும் செயலாகிய இது. என்-எதற்காக. கலை-கலைகளையும்; ஒருமை பன்மை மயக்கம், வாள்ஒளியையும் பெற்ற, மதியம்-சந்திரன். எனை-என்னை: இடைக்குறை. கனல்வான்-எரிக்கிறான்; கால மயக்கம். இச் சந்தின்-இந்தச் சந்தனக் குழம்பாகிய தழலை-நெருப்பை. ப்: சந்தி. பனிநீர்-பன்னீரோடு. அளவி-கலந்து. த், சந்தி. தடவும்-என்னுடைய உடம்பின்மேல் தடவும். கொடியீர்கொடிய பெண்மணிகளே. தவிரீர்-அந்தக் காரியத்தைச் செய் வதை விட்டுவிடுங்கள். தவிரீர்-விட்டு விடுங்கள். இங்கு வந்துநான் படுத்திருக்கும் இந்த இடத்திற்கு வந்து. உலவும்-வீசும். நிலவும்-சந்திரனுடைய கிரணமாகிய நிலாவும். விரைநறுமணம். ஆர்-நிரம்பிய. மலய அனிலமும்-பொதிய மலை யிலிருந்து வீசும் தென்றற் காற்றும். எரியாய்-நெருப்பைப் போல ஆகிவரும்-என்மேல் வீசும். ஆல்: அசைநிலை. அம். அழகிய, தண்-குளிர்ச்சியைப் பெற்ற புனலும்-கங்கை யாற்றின் நீரும். அரவும்-பாம்பும். விரவும்-சேர்ந்து தங்கும். சடையான்-சடாபாரத்தைத் தன்னுடைய தலையிற் பெற்ற வன்மீக நாதனுடைய.அருள்-திருவருளை. பெற்று-அடைந்து. உடையார்-அதையே தம்முடைய உடைமையாகக் கொண்ட வராகிய சுந்தர மூர்த்தி நாயனார். அருளார்-எனக்குத்

தம்முடைய திருவருளை வழங்காமல் இருக்கிறார்.

சந்தின் தழல்: 'செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ் சீதச் சந்தனமென் றாரோ தடவினார்.' என்று நந்திக்

கலம்பகத்தில் வருவதைக் காண்க. -

கந்தம் கமழ் குழலிர்: 'குரவம்.கமழ் நறுமென் குழல் உமை.', 'மருவர்ர் குழலி.மாது., 'முருகு விரிகுழலார்.';