தடுத்தாட்கொண்ட புர்ாணம் 387
'ஏலம் மலிகுழலார்', 'தேம்ரு வார்குழல்.", "கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய்', "கொங்கு சேர்குழ. வாள்.', 'ஏலமலர்க் குழல்மங்கை நல்லாள்.', 'வம்பலரும் மலர்க்கோதை பாகம்மகிழ் மைந்தனும்', 'மருவமை குழல் உமை பங்கர்.'ஏலமார் தருகுழல் ஏழை.', 'கொங்கியல், சுரிகுழல் வரிவளை இளமுலை உமை,', 'கொங்கியல் பூங் குழற் கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள்.' என்று திருஞானசம்பந்த முர்த்தி நாயனாரும், மட்டுவார் குழலாளொடு.', 'வம்பு பூங்குழல் மாது.” மட்டிட்ட குழலார்.', 'மட்டுவார் குழலாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறும் இறைவனார்.', 'மருவுற்ற மலர்க்குழலி மடவாள்.', 'வம்பின்மலர்க் குழலுமையாள் மன வாளன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், குரவமரும் குழலாள் உமைநங்கை.', 'குரவம் நாறிய குழலினார்.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்.’’ என்று மாணிக்க வாசகரும், ! 'வம்புவாம் கூந்தல் மனைவியை.', 'விரைகமழ்ந்த மென் கருங்குழல்', 'வம்புலாம் கூந்தல் மண்டோத்ரி.", "கொங் குண் குழலார்.', 'கொங்கார் குழலார்." "மணங்கள் நாறும் வார்குழலார் மாதர்கள்.', 'வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர்.’’ என்று திருமங்கை ஆழ்வாரும், 'வம்பவிழ் கோதை பொருட்டா. என்று நம்மாழ்வாரும் பாடியருளி
யவற்றைக் காண்க. - .
அடுத்து வரும் 176-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: - "என்வரைக்கும் இராத்திரி நேரம் விடியும் வண்ணம் இருக்கவில்லை; பொறுமையும், என்னுடைய உள்ளத்தை வெளியில் போகாமல் நிறுத்தும் இயல்பும் சிறிதளவும் என் னிடம் தங்கவில்லை; என்னுடைய கொங்கைகளும் மனமும் உலரும், தீய வினையை முன் பிறவியில் செய்திருக்கும்
அடியேன் ஒருத்தியாக உள்ள என்னுடைய அளவிலோ, பெருமையைப் பெற்ற வாழ்வு இருக்கிறதோ? தோழி'