பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 3}

அடுத்து உள்ள 20-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "வாத்தியங்கள் பலவற்றை அவற்றை வாசிப்பவர்கள் வாசிக்க, எவ்விடங்களிலும் தம்மைத் துதிக்கும் சத்தம் எடுப்பாக முழங்க, விருப்பம் மருவிய பெண்மணிகள் விரும்பிப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்த இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும் முறையாக அத்திய, யனம் செய்து நிறைவேற்றிய வேதியர்கள் அந்த நான்கு. வேதங்களை ஒதும் இனிய கானத்தைப் போல ஓங்கி எழ, உலகத்தில் வாழும் மக்கள் வியப்பை அடைந்து விருப்பத் தைக் கொள்ள, குதிரையின் மேல் ஏறிக் கொண்டு வந்து, கலந்துள்ள மக்களுக்கு பேரானந்தத்தை உண்டாக்கி உயர மான வாகனங்களும், பல்லக்குகளும் ஏறி வந்தவர்களு. டைய பக்கத்தில் விளங்குபவர் ஆனார் சுந்தரமூர்த்தி நாயனார். பாடல் வருமாறு:

'இயம்பல துவைப்ப எங்கும்

ஏத்தொலி எடுப்ப மாதர் நயந்துபுல் லாண்டு போற்ற

நான்மறை ஒலியின் ஓங்க வியந்துபார் விரும்ப வந்து

விரவினர்க் கின்பம் செய்தே உயர்ந்தவா கனயா னங்கள்

மிசைக்கொண்டார் உழைய ரானார்.’’ இயம்-வாத்தியங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பலபலவற்றை. அவையாவன: நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்சதாளம், சல்லரி, வீணை, யாழ், துந்துபி, எக்காளம், புல்லாங்குழல், முகவீணை, ஜலதரங்கம், முரசம், பேரிகை. முதலியவை. துவைப்ப-அவற்றை வாசிப்பவர்கள் வாசிக்க. எங்கும்-எந்த இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மாதர்-விருப்பம் மருவிய பெண்மணிகள்; ஒருமை பன்மை மயக்கம். நயந்து-விரும்பிய. பல்லாண்டு-பல்லாண்டு: