பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

தடுத்தாட்கொண்ட் புராணம் 391

எந்தை.', 'ஏறுகந் தேறி னானே.', 'அடல்விடை ஊர்தி யாகி.', 'ஆனனைத் தேறும்.', "ஊர்ந்த விடையுகந் தேறிய செல்வனை.', விடுபட்டி ஏறுகந் தேறி.', 'பெற்றம் ஏறுவர்.', 'விடையும் ஏறுவர்.', 'மால்விடை இட்டமா உகந்தேறும் இறைவனார்.', 'ஏற தேறிய எம்பெருமான்.', 'ஏற தேறும் இடைமருத்சனார்.', 'பெற்றம் ஏறிவென்.', 'கொல்லை மால்விடை ஏறிய கோவினை.', 'விடை ஊர்தியை.', 'விடைகொள் ஊர்தியினான்.', 'இடபம் ஏறியும்.', 'ஏறேறும் எந்தையை.', 'ஏறேற்க ஏறுமா வல்லான்.', 'ஏறேற என்றும் உகப்பாய் போற்றி.’’, 'வீறுடைய ஏறேறி.', 'ஏறேறி ஏழுலகும் ஏத்த நின்றார்.', ஆனேறொன் றுணர்ந்துழலும் ஐயாறன்.', 'ஆனேறொன் றது.ஏறும் அண்ணல்.', ஏறேறி எங்கும் திரிவான்.", 'நரையார்ந்த விடையேறி., 'கடிய விடைஏறி.', 'ஆனேற தேறும் அழகர்.”, நரைவிடையொன் றுணர்தி யானை.', 'விடைஏறிக் கடைதோறும் ப லி கொள் வானை.', 'மால்விடைஒன் றுணர்தி யானை.', 'ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், விடைய தேறித் திரிவதென்னே..', 'ஏற்றை அடர ஏறி வேறுபட்டுத் திரிவ தென்னே.”, வேகம் கொண் டோடிய வெள்விடை ஏறி.", "வருவார் விடைமேல்.’, ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை., 'பெற்றம் ஏறுகந் தேறவல்லானை.', 'விடையின்மேல் வருவானை.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "இடபம் உகந்தேறிய வாறு.', 'விடை விடாதுகந்த விண்ணவர் கோவே.' என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 178-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

‘ என்று இத்தகையவையாகிய வார்த்தைகள் பல வற்றையும் கூறும், இருட்டைப் போல அமைந்த முன்னுச்சி மயிரையும், சுருள் சுருளாகிய கூந்தலையும் பெற்ற பரவை யையும் வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனாரையும்