392 பெரிய புராண விளக்கம்-2
இந்த உலகத்தின்மேல் பிறக்குமாறு முன் காலத்தில் திரு வாய் மலர்ந்தருளிச் செய்தவனாகிய கைலாசபதி திருவருளை வழங்கும் விதத்தை யார் எண்ணுவார்? இந்தத் தலத்திற்கு வந்து தேவர்களும் வணங்கும் செல்வ வளத்தைப் பெற்ற திருவாரூர்ப் பூங்கோயிலில் வாழும் சிவபெருமானாகிய வன்மீகநாத சுவாமிகள், அன்றைக்கு அந்த இடத்தில் அந்த இருவருடைய திருமணத்தை நீங்கள் புரியுங்கள்' எனத் தம்முடைய அடியவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தால் திருவாய் மலர்ந்தருளிச் செய்து. பாடல் வருமாறு: .
" என்றின் னனவே பலவும் புகலும்
இருளார் அளகச் சுருளோ தியையும் வன்றொண் டரையும் படிமேல் வரமுன்
புருள்வான் அருளும் வகையார் நினைவார்? சென்றும் பர்களும் பணியும் செல்வத்
திருவாரூர்வாழ் பெருமான் அடிகள் அன்றங் கவர்மன் றலைர்ே செயும்." என்
றடியார் அறியும் படியால் அருளி.
இந்தப் பாடல் குளகம். என்று-என. இன்னனவேஇத்தகையனவாக உள்ள வார்த்தைகளையே. பலவும்-பல வற்றையும். புகலும்-கூறும். இருள்-இருட்டைப் போல. ஆர்அமைந்த அளக-முன்னுச்சி மயிரையும், ச்: சந்தி.சுருள்-சுருள் சுருளாகிய, ஒதியையும்-கூந்தலைப் பெற்றபரவையையும்: ஆகு பெயர். வன்றொண்டரையும்-வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனாரையும். படிமேல்-இந்த உலகத்தின் மேல். வர-பிறக்குமாறு. முன்பு-முன் காலத்தில். அருள்வான்திருவாய் மலர்ந்தருளிச் செய்தவனாகிய கைலாசபதி. அரு ளும்-தன்னுடைய திருவருளை வழங்கும். வகை-விதத்தை. யார்-எவர். நினைவார்-எண்ணுவார். சென்று-வந்து. உம்பர் களும்-தேவர்களும், பணியும்-வணங்கும். செல்வ-செல்வ வளத்தைக் கொண்ட த்: சந்தி. திருவாரூர்-திருவாரூர்ப் பூங் கோயிலில்; ஆகுபெயர். வாழ்-வாழும். பெருமான்-சிவ பெருமானாகிய, அடிகள்-வன்மீக நாத சுவாமிகள். அன்று