பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 395.

பெண்மணிக்கு. ஆரூரன்டால்-நம்பியாரூரனாகிய சுந்தர மூர்த்தியோடு உருபு மயக்கம். மணம்-உனக்குத் திருமணம். அணியது - சமீபகாலத்தில் நடைபெறுவது. என்று-என. அருள-திருவாய் மலர்ந்தருளிச் செய்ய.

சடைக்குப் பொன் உவமை. பொன்னிர்மை துன்றப் புறந்தோன்றும்...புன்சடையினான்.', 'பொன்திரண் டன்ன புரிசடை.', 'பொன்னியன்ற சடை.', 'புல்கு பொன்னிறம் புரிசடை.', 'பொன்த்யங் கிலங்கொளிர் நலங்குளிர்ந்த புன்சடை.', 'பொன்போலும் சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே.', 'பொன்னன புரிதரு சடையினர்.”, “புரிதரு, புன்சடை பொன்தயங்க.’’ என்று திருஞான சம்பந்த, மூர்த்தி நாயனாரும், 'பொன்னலில் புன்சடையான்.’’, 'பொற்சடை பொன்போல் மிளிர,', 'பொன்னன வார். சடை.', 'பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ.'; 'பொன் உள் ளத்திரள் புன்சடை.', 'செம்பொனாற் செய்தழகு பெய்தாற்போலும் செஞ்சடைஎம் பெருமானே.' 'பொன்னேர் சடைமுடியாய் நீயே.', 'பொன்னிசையும் புரிசடைஎம் புனிதன்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'செம்பொனேர் சடையாய்.” என்று சுந்தர மூர்த்தி: நாயனாரும், 'பொன்னை வென்றதோர் புரிசடை.' என்று. மாணிக்க வாசகரும், 'பொன்னைச் சுருளாகச் செய்தனைய துரச்சடையான்.’’ என்று காரைக்கால் அம்மையாரும், "புன்சடை விட்டெரி பொன் திகழும்.’’ என்று கபிலதேவ: நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து உள்ள 180-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'காம மயக்கமாகிய துயரத்தில் கவலையை அடைந்த வராகிய பரவையாருடைய உள்ளத்தில் வரம்பு இல்லாத இருட்டும், இராத்திரி நேரம் கழிந்து போகும் கடைசிச் சாமத்தின் இருட்டும் நீங்கி, விடியற் காலம் வர, சூரியன் உதயமாகும் சமயத்தில் வன்மீக நாதருடைய அடியவர்கள் கூடிக்கொண்டு பாதுகாப்புத் துணைவராகிய அந்த வன்மீக.