தடுத்தாட்கொண்ட புராணம் - 401
பாடி', மின்னிடைமேல் கைவைத்து.', மின்னனைய நுண்மருங்குல் வேகவதி.', மின்னிடையாள் நாயகனை.", "மின்னிடையார் சேரியிலும்.', மின்னிடை ஆய்ச்சியர்." என்று திருமங்கை ஆழ்வாரும் பாடியருளியவற்றைக் காண்க. மகளிர் இடுப்புக்குப் பூங்கொடி உவமை: வல்லி நுண் இடையாள் உமையவள்.', 'வல்லிய நுண்ணிடையாள் உமையாள்.', 'பூங்கொடி மடவாள் உமை." என்று திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், எழுது கொடி.இடை யார்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், கொடியிட்ை காணில்.’’ என்று கருவூர்த் தேவரும், கொடியைக் கோமள்ச் சாதியை." என்று சேதிராயரும், கொடியென நடுங்கும் கோல மருங்குலர்', 'சிறுகொடி மருங்கின்.", 'ஒழுகுகொடி மருங்குல்.” எனக் கொங்கு வேளிரும், வள்ளி நுடங்கிடை மாதர்." என்று பெரியாழ்வாரும், வல்விச் சிறு நுண்ணிடையார்.” என்று திருமங்கை ஆழ்வாரும் பாடியருளியவற்றைக் காண்க. . . . . .
"கொடியிடை' (நகரப் படலம், 37), கொடியுவாம் மருங்குல் நல்லார்.' (நீர் விளையாட்டுப் படலம், 13), "வள்ளி நுண்ணிடை மாமலராள்.' (கங்கைப் படலம், 19), "வல்லிகள் நுடங்கக் கண்டர்ன் மங்கைதன் மருங்குல் நீேர்க்க." (சூர்ப்பனகைப் பட்லம், 6), வள்ளிநுண் மருங்கும் அன்ன வானவர் மகளிர்." (ஊர்தேடு படலம், 38) என்று கம்பரும் பாடியருளியவற்றைக் காண்க. "கொடிமென் துக்ப்பிற்.குயிலமென் சொல் அவளை." (தோத்திரப்படலம், 3) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றைக் காண்க. . கொங்கைக்கு மல்ை உ வமை: 'மலைமுலை... அரக்கியர்.' (படைத் தலைவர் வண்தப் படலம், 61) என்று கம்பராமாயணத்தில்,வருவதைக் காண்க.
மகளிர் இடுப்புக்கு மின்னல் உவமை மின்பிறழ் துசுப்பினர்." (திருவவதாரப் படலம், 116), மின்னொத்த இடையி னாரும். (நீர் விளையாட்டுப் படலம், 6), "மின்
பெ.-2-26