பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹫2 பெரிய புராண விளக்கம்-2

னெனதுமங்குகின்ற மருங்குவாள் ஒருத்தி. (உண்டாட்டுப் படலம், 16), மின்னேபுரை இடையாளொடும்.' (பாசு ராமப் படலம், 4), மின்னை யேய்இடை நுடங்கிட." {விராதன் வதைப் படலம், 40), மின்னைப்போல் இடை யாளொடு.', மின்னிடை அலச ஒடி." (சூர்ப்பனகைப் படலம், 62, 66), மேகத்தின் மின்னை முன்னே வென்ற நுண் ணிடையை." (மாரீசன் வதைப் படலம், 76), மின் னிட்ைச் சனகியை." (கலன்காண் படலம், 18), மின்னிடை ...மாத்ர்.” (கிட்கிந்தைப் படலம், 77), மெலிவுடை மருங்குல் மின்னின் அலமர. (ஊர்தேடு படலம், 110), 'மின்னிடைச் செவ்வாய்." (நிந்தனைப் படலம், 12) என்று கம்ப ராமாயணத்திலும், மின்னிடையாள் சரபை." (இராவணன் பிறப்புப் படலம், 65), மின்னிடையின்ார்." (திக்குவிசயப் படலம், 172), 'மின்னார் மருங்குல் திரு." (அனுமப் படலம், 44), மின்னே ரிலாதஇடை மெல் வியலை.' (சீதை வனம்புகு படலம், 71), மின்னிடை மடவாய்.” (இலவணன் வதைப் படலம், 21), மின்னிடை 'யாளைக் கண்டு மெய்யுருகி.” (r. 23), மின்னிய நுண் னிடை மிதிலை வல்லி.' (அசுவமேதயாகப் படலம், 124) என்று உத்தர காண்டத்திலும் வருவனவற்றைக் காண்க.

அடுத்து வரும் 18-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"சுந்தர மூர்த்தி தன்னை ஆளாக உடைய தலைவ னாகிய வன்மீக நாதனுடைய திருவடிகளாகிய செந்த்ாமரை மலர்களைத் தன்னுடைய தலையின்மேலும் திருவுள்ளத் திலும் மலரச் செய்து பல திருப்பதிகங்களாகிய தான் பாடியருளும் செந்தமிழ் மொழியில் கட்டிய மாலைகள் பல வற்றை அணிந்து பரவை என்று கூறப்படும் மின்னலைப் போன்ற இடுப்பைப் பெற்ற மங்கையோடும் சேர்ந்து விளையாடி இருவரும் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகிறவர்கள் ஆனார்கள்: பாடல் வருமாறு: