தடுத்தாட்கொண்ட புராணம் 403
தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத்
திருப்பதிகம் பன்னுதமிழ்த் தொடைமாலை பலசாத்திப்
பரவையெனும், மின்னிடையாள் உடன்கூடி விளையாடிச்
- செல்கின்றார். ' தன்னை-சுந்தர மூர்த்தி தன்னை. ஆளுடைய-ஆளாக உடைய பிரான்-தலைவனாகிய வன்மீக நாதனுடைய. சரண-திருவடிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். அரவிந்த பலர்-செந்தாமரை மலர்களை ஒருமை பன்மை மயக்கம். சென்னியிலும்-தன்னுடைய தலையின்மேலும், சிந்தை கபிலும்-தன்னுடைய திருவுள்ளத்திலும். மலர்வித்து-மலரும் வண்ணம் செய்து. த், சந்தி, திருப்பதிகம்-திருப்பதிகங் களாகிய, ஒருமை பன்மை மயக்கம். பன்னு-தான் பாடியரு :ளும், தமிழ்-செந்தமிழ் மொழியில். தொடை-கட்டுதலைப் பெற்ற. மாலை-மாலைகள்: ஒருமை பன்மை மயக்கம். பவபலவற்றை சாத்தி-வன்மீக நாதருக்கு அணிந்து. ப்:சந்தி. பரவை எனும்-பரவை என்று கூறப்படும். எனும்: இடைக் குறை. மின்-மின்னலைப் போன்ற. இடையாள் உடன்இடுப்பைப் பெற்ற பெண்மணியோடு. கூடி சேர்ந்து. விளையாடி-திருவிளையாடல்களைப் புரிந்து ஒரு ைம. பன்மை மயக்கம். ச் சந்தி. செல்கின்றார்-பரவையும் சுந்தர மூர்த்தியும் தங்களுடைய இல்லற வாழ்க்கையை நடத்தித் கொண்டு போகிறவர்கள். ஆனார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.
சென்னியிலும் சிந்தையிலும் வைத்தல்: தகவுடை யோர் சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தி யான்.' (குகப் படலம், 32) என்று கம்ப ராமாயணத்தில் வருவதைக் காண்க. ' - - - - சரணாரவிந்த மலர்: "மலரடி கூடுவார்.', 'பங்கய மலர்ச் சீறடி.." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா