பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடு த்தாட்கொண்ட புராணம் 409

மலர் முதலிய நீர்ப் பூக்கள்: ஒருமை பன்மை மயக்கம். அலர் மலர்ந்திருக்கும். வாவி-வாவியிலும். வாபி என்ற வட சொல்லின் திரிபு. மாடு-அதன் பக்கத்தில் அமைத்திருக்கும். செய்குன்றின்-செய்குன்றிலும்.புடை-அதன் பக்கத்தில் உள்ள ஒர் தெற்றி-ஒரு திண்ணையிலும். ச் சந்தி. சீதள-குளிர்ச்சி யைப் பெற்ற, த், சந்தி. தரள-முத்துக்களால் கட்டப் பெற்ற: ஒருமை பன்மை ம்யக்கம். பந்தர்-பந்தலிலும் விளையாடி விட்டு, ச், சந்தி. செழும் தவிசு. தாம் அமர்ந்திருந்த செழுமை யான ஆசனத்திலிருந்து. இழிந்து-இறங்கி வந்து. தங்கள் தங்களுடைய என்றது. சுந்தர மூர்த்தி நாயனாரையும் பரவையாரையும் சேர்த்து. நாதர்-தலைவராகிய வன்மீக நாதர் எழுந்தருளியிருக்கும். பூங்கோயில்-திருவாரூர்ப் பூங் கோயிலை. நண்ணி-அடைந்து. க், சந்தி. கும்பிடும்-தம்மு டைய கைகளைக் தம்முடைய தலையின்மேல் வைத்துக் குவித்துக் கும்பிடும். விருப்பால்-விருப்பத் தோடு உருபு மயக்கம். நம்பி-ஆளுடைய நம்பியாகிய சுந்தர மூர்ந்தி நாயனார். - -

பிறகு வரும் 184-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

‘சுந்தர மூர்த்தி நாயனார் தேவ லோகத்தில் வாழும் தேவர்கள் வாழ்த்தும் அழகு கிளர்ந்து எழும் ஆடையை உடுத்து, அரைத்த சந்தனத்தின் குழம்போடு சேர்ந்த குங்குமப் பூவை அரைத்த கலவையைத் தம்முடைய திரு மேனியின்மேல் பூசிக்கொண்டு, அழகைப் பெற்ற கிரீடத் தைத் தம்முடைய தலையில் அலனிந்து கொண்டு, ஒளி வீசுகின்ற மாணிக்கங்களைப் பதித்த அணிகலன்களைப் பூண்டு கொண்டு இந்திரனுடைய செல்வத்தைவிட மேற் பட்டு விளங்கும் அழகு மிகுதியாக இலகிக் காட்சி அளிக்க,'

பாடல் வருமாறு: - - அக்தரத் தமரர் போற்றும் அணிகிளர் ஆடை

சாத்திச் சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவை

- . சாத்திச்