பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் - 33

' மங்கல கீத காத மறையவர் குழாங்க ளோடு

தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றிச் சூதும் பங்கய முகையும் சாய்த்துப் பணைத்தெழுந் தணியில் மிக்க குங்கும முலையி னாரும் பரந்தெழு கொள்கைத் தாகி.'

இந்தப் பாடல் குளகம். மங்கல-மங்கள வாத்தியங்கள்: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: நாகசுரம், ஒத்து, - மத்தளம், கஞ்சதாளம், யாழ், வீணை, தம்புரா, முக வீணை, சல்லரி, தாரை, தப்பட்ட்ை, முரசு, பேரிகை, ஜலதரங்கம் முதலியவை. கீத-எழுப்புகின்ற பாடல்களி னுடைய ஒருமை பன்மை மயக்கம். நாதம்-இனிய ஒலியும். மறையவர்-வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். குழாங்களோடு-கூடிய கூட்டங்களோடும். தொங்கலும்மலர்மாலைகளும்; ஒருமை பன்மை மயக்கம். விரையும்வாசனைத் திரவியங்களும்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: அத்தர். புனுகு, ஜவ்வாது, பன்னீர், வாசைைப் பொடி, தசாங்கம் முதலியவை. சூழ்ந்த-அணிந்து கொண்டு சுற்றி வந்த மைந்தரும்-வலிமையைப் பெற்ற ஆடவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். மைந்து-வலிமை, துவன்றி-சுந்தரமூர்த்திநாயனாருடைய திருமண ஊர்வலத் தில் சேர்ந்துகொண்டு. ச்: சந்தி. சூதும்-சூதாடும் காய் களையும்; ஒருமை பன்மை மயக்கம். பங்கய முகையும்தாமரை அரும்புகளையும்; ஒருமை பன்மை மயக்கம். சாய்த்து-தோல்வி அடையச் செய்து வெற்றியைப் பெற்று. ப்:சந்தி. பனைத்து எழுந்து- பெருத்து மேல்நோக்கி எழுந்து. அ னி யி ல் - ப ல வ ைக ஆபரணங்களால்: உருபு மயக்கம். அவையாவன: தங்கச்சங்கிலி, கம்மல்கள், தோடுகள், சுட்டி, புல்லாக்கு, ஜிமிக்கிகள், வங்கிகள், அட்டிகை, ஒட்டியாணம், தங்க வளையல்கள், கங்கணங்கள், காற்சிலம்புகள், தண்டைகள், காற் காப்புக்கள், மோதிரங்கள், மெட்டிகள், சதங்கைகள், பாதசரங்கள் முதலியவை. மிக்க-மிகுதியாக விளங்கிய

பெ-ப-3