பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 பெரிய புராண விளக்கம்-2

கோலம், தழைப்ப-தழைத்து விளங்க. வீதியினை-திரு வாரூரில் உள்ள ஒரு திருவீதியை. ச்: சந்தி. சார்ந்தார்அடைந்தார். -

ஆயிழை மகளிர்: "அணுகுங் கொல்என் ஆயிழையே.', 'அணியாயிழை.' என்று திருமங்கையாழ்வார் பாடலிலும், 'அலம்புபாரக் குழலியொ ராயிழை.', 'அருப்பு மென்முலை யாளங்கொ ராயிழை.' (உலாவியற் படலம், 21, 22). 'ஆயிழை யவரை ஏவ.” (கோலம் காண் படலம், 2), 'ஆயிழை தன்னை அடைந்த ஆழிமன்னன்.” (கைகேசி சூழ்வினைப் படலம், 2) என்று கம்ப ராமாயணத்திலும், வருவனவற்றைக் காண்க.

பிறகு உள்ள 186-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

பெண்மணிகள், "திருநாவலூரில் திருவவதாரம் செய் தருளிய சைவ சமயத்தினுடைய நல்ல தவத்தைப் புரிந்த ஆண் யானையைப் போன்றவரே!' எனவும், "பகைவர். களாகிய தாரகாட்சன், வித்யுன்மாவி, வாணன் என்ற மூன்று அசுரர்களுடைய மூன்று பறக்கும் கோட்டை களாகிய புரங்களை அழித்து இடப வாகனத்தை ஒட்டு கிறவராகிய வன்மீக நாதருடைய பக்தரே. எனவும், 'கெடுதல் இல்லாத சீர்த்தியையும் பெருமையையும் கொண்ட திருவாரூரில் வாழும் அந்தணர்களுடைய தலைவரே.' எனவும் அங்கே இருந்தவர்கள் இரண்டு பக்கங் களிலும் வேறு வேறாகவும் வாழ்த்த, பாடல் வருமாறு: - காவலூர் வந்த சைவ கற்றவக் களிறே." - என்றும், மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்

- * கன்பு.’ என்றும்,

தாவில்சீர்ப் பெருமை ஆரூர் மறையவர்

- . . . . . தலைவ. என்றும்,

மேவினர் இரண்டு பாலும் வேறுவே றாயும்

போற்ற. '