தடுத்தாட்கொண்ட புராணம் 413
இந்தப் பாடல் குளகம். நாவலூர்-திருநாவலூரில். வந்த-திருவவதாரம் செய்தருளிய. சைவ-சைவ சமயத்தினு டைய. நல்-நல்ல. தவ-தவத்தைப் புரிந்த, களிறே-ஆண் யானையைப் போன்றவரே; உவம ஆகுபெயர். என்றும்எனவும். மேவலர்-தம்முடைய பகைவர்களாகிய தார காட்சன், வித்யுன்மாலி, வாணன் என்ற மூன்று அசுரர் களுடைய ஒருமை பன்மை மயக்கம். புரங்கள்-பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களையும். செற்ற-அழித்த. விடையவர்க்கு-இடப வாகனத்தை ஒட்டுபவராகிய வன்மீக நாதருடைய: உருபு மயக்கம். . அன்ப-பக்தனே, என்றும்எனவும். தா-கேடு. இல்-இல்லாத் கடைக்குறை. சீர்சீர்த்தியையும். ப்: சந்தி. பெருமை-பெருமையையும் பெற்ற. ஆரூர்-திருவாரூரில் வாழும். மறையவர்-ஆதிசைவ அந்தணர் களினுடைய, ஒருமை.பன்மை மயக்கம். தலைவ-தலைவனே, என்றும்-எனவும். மேவினர்-அங்கே வந்த்வர்கள்: ஒருமை பன்மை மயக்கம், இரண்டு பாலும்-இரண்டு பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். வேறு வேறாயும்-வேறு வேறாக வும். போற்ற-வாழ்த்த
ஆடவருக்குக் களிறு உவமை பிடிக்குக் களிறே ஒத்தி."
என்றுக்ந்த்ர மூர்த்தி நாயனாரும், இருகை யானையை ஒத்திருந்து," என்று மாணிக்க வாச்க்ரும், மதக்களி. றிரண்டுட்ன் மண்டி யாஅங்கு. "எஃகொழி களிற்றின் வெய்துயிர்த்திரங்கி.', 'குழிப்படு களிற்றிற் படர்சு ரெவ்வ மொடு பதைத்தனர்.” (பெருங்கதை, 1, 32:38, 33; 199,46: 53-4) என்று கெர்ங்கு வேளிரும் பாடியவற்றைக் காண்க.
பிறகு உள்ள 187ஆம் பாடலின் கருத்து வருமாறு:
‘சுந்தர மூர்த்தி நாயனார் துதிக்கையைக் கொண்ட ஆண்யானை, குரங்கு, கோழி, காடை, கவுதாரி ஆகிய விலங்குகளையும் பறவைகளையும் பிடித்துக் கொண்டு தம்முடைய பக்கத்திற்கு முன்னால் போகிற மக்கள் தாங்கள் பேசும் மொழியைப் பழக்கிக் கொண்டு போக,