4 14 - பெரிய புராண விளக்கம்-2
ழிகுதியாக உள்ள மலர்களை வைத்திருக்கும் தட்டுக்களை எடுத்துக் கொண்டு வருகிறவர்களும், நறுமணம் கமழும் வெற்றிலைப் பையை உடையவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, மையைத் தடவிக் கொண்ட கரிய கண்களைக் கொண்ட பெண்மணிகள் இவரை அடையப் பெறவில்லையே என்று எண்ணி வருந்தும் வண்ணம் நீண்ட திருவாரூர்த் தெருவில் அந்த நாயனார் எழுந்தருளினார். பாடல் வருமாறு:
கைக்கடா குரங்கு கோழி சிவல்கவு தாரி א
- பற்றிப்
பக்கமுன் போது வார்கள் பயில்மொழி பயிற்றிச்
செல்ல மிக்கபூம் பிடகை கொள்வோர் விரையடைப்
. - . ப்ையோர் சூழ
மைக்கருங் கண்ணி னார்கள் மறுகள்ே மறுகில்
' - வந்தார்.
கை-துதிக்கையைப் பெற்ற. க், சந்தி. கடா-ஆண் யானையையும். குரங்கு-குரங்கையும். கோழி-கோழியையும். சிவுல்-காடையையும். கவுதாரி.கவுதாரியையும். பற்றி-தங்க குளுடைய கைகளில் பிடித்துக்கொண்டு. பக்கம்-சுந்தர மூர்த்தி நாயனாருக்குப் பக்கத்தில். முன்-முன்னால். போதுவார்கள். போகிற மக்கள். பயில்-தாங்கள் பேசுகிற. மொழி-தாழ் மொழியை. பயிற்றி-பழக்கிக் கொண்டு. ச்: சந்தி. செல்லபோக. மிக்க-மிகுதியாக உள்ள பூம்-மலர்களை வைத்தி ருக்கும்; ஒருமை பன்மை மயக்கம், பிடகை-தட்டை. கொள்வோர்-எடுத்துக் கொண்டு வருகிறவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். விரை-நற்றுமணம்: கமழும். அட்ைப்பை யோர்-வெற்றிலைப்பையை வைத்திருப்பவர்களும் ஒருமை பன்மை மயக்கம். சூழி-தம்மைச் சூழ்ந்து வர, மை-மையைத் தடவிக்கொண்ட, க்: சந்தி. கரும்-கருமையான. கண்ணி னார்கள்-விழிகளைப் பெற்ற பெண்மணிகள். கண்: ஒருமை பன்மை மயக்கம். மறுக-இவரை அடையப் பெற்றிலோமே